
கலைப்புலி தாணுவின் தயாரிப்பு என்றாலும், துப்பாக்கி படத்தின் நிறைய ஏரியாக்களை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வாங்கி விற்று இருக்கிறார்.

துப்பாக்கி ஷூட்டிங்கில் காஜல் அகர்வாலை விஜய் செல்லமாக அழைப்பது எப்படி தெரியுமா? காச்சு...

பஞ்ச் டயலாக்குகளில் சதத்தை தாண்டி இருக்கிறார் விஜய். காதுகள் பத்திரம்!

தன் அரசியல் பிரவேசப் படத்தை நீங்கள்தான் இயக்க வேண்டும் என ஏ.ஆர்.முருகதாஸுக்கு அன்பு கட்டளை போட்டிருக்கிறார் விஜய். துப்பாக்கி அவ்வளவு அருமையாக வந்திருக்கிறதாம்!

துப்பாக்கி படத்தின் பாடல் காட்சிகளை தன் சார்பில் ஒரே ஒரு நபருக்குத்தான் போட்டுக் காண்பித்திருக்கிறார் விஜய். அந்த வி.ஐ.பி. சினிமா விஜய்யின் பாச மகன் சஞ்சய்!

துப்பாக்கியை ஸ்டைலாக சுற்றும் காட்சிக்காக விசேஷ பயிற்சி மேற்கொண்டார் விஜய்.

'தலைவன்' கதையை சற்றே தள்ளி வைத்திருக்கும் விஜய் துப்பாக்கி ரிலீஸுக்குப் பிறகு வெளிநாடு கிளம்புகிறார்.
http://www.youtube.com/watch?v=OBfKKhU2O6g&feature=youtu.be
Post a Comment