செவிசாய்க்காத ஜெ...
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்த அழைத்தும், தமிழகம் செவிசாய்க்கவில்லை என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி குற்றம்சாட்டியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விஷயத்தில் கேரள அரசின் அணுகுமுறையைக் கண்டித்து தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வேலைநிறுத்தம், கடையடைப்பு நடைபெற்றது.
ஆலப்புழாவில் "பொதுமக்களுடனான நேரடிச் சந்திப்பு' என்ற நிகழ்ச்சியில் பேசிய கேரள முதல்வர் இது குறித்து கருத்துத் தெரிவித்தபோது, அணை தொடர்பான விவகாரத்தை கேரளம் சுமுகமாகவும், பேச்சுவார்த்தையின் மூலமும் தீர்த்துக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
""அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைக்கு நாங்கள் விடுத்த அழைப்புக்கு தமிழகம்
உரிய வகையில் மதிப்பளிக்கவில்லை. கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை பாதுகாப்புக் காரணத்துக்காக அந்த மாநில முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கிறார். ஆனால் முல்லைப்பெரியாறு அணையினால் கேரளத்துக்கு ஏற்படவுள்ள ஆபத்துக்கு அதே அளவுகோலை பயன்படுத்த மறுக்கிறார்'' என்றார்.
Labels:
இந்தியா

Post a Comment