Latest Movie :

காளிமுத்து மகள்... சீமானுக்கு மணமகள்!

ம் வாசகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் இனியும் கட்டிப்போட நமக்கு விருப்பம் இல்லை. ஆம்... நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார். மணமகள் முன்னாள் சபாநாயகரான மறைந்த காளிமுத்துவின் மகள் கயல்விழி. சென்னை அண்ணா நகரில் வசிக்கும் கயல்விழி காளிமுத்துவின் இரண்டாம் தாரத்து மகள். பட்டதாரிப் படிப்பை முடித்திருக்கும் கயல்விழி சீமானின் புரட்சிகரமான பேச்சில் மனதைப் பறிகொடுத்திருக்கிறார். 

நாம் தமிழர் கட்சியில் சேர விரும்பிய கயல்விழி அதுபற்றி பேசுவதற்காக சீமானை சந்தித்து இருக்கிறார். காளிமுத்துவின் மீது மிகுந்த மரியாதை கொண்ட சீமான் கயல்விழியை மனமார வரவேற்றதுடன் மட்டும் அல்லாமல், கயல்விழியின் தாயையும் சந்தித்து நன்றி தெரிவித்து இருக்கிறார். குடும்ப ரீதியான இந்த நட்புதான் ஒருகட்டத்தில் திருமணப் பேச்சு வரை நீண்டிருக்கிறது. 

திருமணமே வேண்டாம் என்கிற நிலையில் இருந்த சீமான் மீது தேவையற்ற சர்ச்சைகளை சிலர் தொடர்ந்து ஏற்படுத்தி வந்தார்கள். விஜயலெட்சுமி என்கிற நடிகையைத் தூண்டிவிட்டு புகார் கொடுக்க வைத்தார்கள். அரசியலில் புதுப்புயலாக பரபரப்பு கிளப்பும் சீமான் மீது உளவுத்துறையும் இதர அரசியல் கட்சிகளும் சினிமாப் புள்ளிகள் சிலரும் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். அதனால் பெண் சம்மந்தமான புகார்களை இவர்கள் எந்த நேரத்திலும் சீமானுக்கு எதிராகக் கிளப்பக்கூடும். அதனால் திருமண வாழ்வில் அடியெடுத்து வைப்பதே சிறந்தது என சீமானுக்கு பலரும் அறிவுரை வழங்கினார்கள். இதற்கிடையில் சீமானுக்கு எதிராக பரபரப்பு கிளப்பிய விஜயலட்சுமி தன்னுடைய வழக்குகளை வாபஸ் பெறுவதாக சொல்லியிருக்கிறார். 

அதனால் இந்த சுபவேளையை தவறவிட விரும்பாத சீமான் காளிமுத்து மகள் கயல்விழியை திருமணம் செய்ய பரிபூரண சம்மதம் தெரிவித்திருக்கிறார். சிவகங்கை மாவட்டம் அரனையூரில் வசிக்கும் சீமானின் தாய் தந்தையர் இருவரும் இந்த திருமணத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். ''முகாம்களில் வாழும் ஈழ அகதிப் பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து என் மகன் திருமணம் செய்வான் என எதிர்பார்த்தேன். ஈழ உணர்வு கொண்ட கயல்விழியை மணப்பது அகதிப் பெண்ணை மணப்பதற்கு ஒப்பானதுதான்" எனச் சொல்லி இருக்கிறார் சீமானின் தாய்.


மேதகு வே.பிரபாகரன் - மதிவதனி திருமணம் நடந்த அக்டோபர் முதல் தேதி சீமானின் திருமணமும் நடக்க இருக்கிறது. மிகப்பெரிய அளவில் விருந்துக்கு ஏற்பாடாகி வருகிறது. நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கும் இந்தத் திருமண விழாவை தலைமை ஏற்று நடத்த இருப்பவர் ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன். 

சீமானின் திருமணத்தில் பெருமிதம் கொண்ட நம் 'கும்பல்' இணையதளம் நம் உணர்வான வாசகர்களின் சார்பில் மணமக்களை வாழ்த்துகிறது. 

- கும்பல்  
  
Share this article :

+ comments + 11 comments

23 July 2012 at 22:41

வாழ்த்துக்கள் சீமான் சார்... மிகத் தரமான மரியாதை மிகுந்த குடும்பத்தில் பெண் எடுக்கின்றீர்கள். உங்கள் மீதான அத்தனை சலசலப்புகளுக்கும் இந்த முடிவு முடிவு கட்டும்!

Anonymous
23 July 2012 at 22:42

நல்வாழ்த்துக்கள் சீமான் அண்ணா...

24 July 2012 at 20:22

congrats anna...

25 July 2012 at 01:25

சீமான் திருமணம் நல்லபடி நடக்கட்டும். திருமாவளன் திருமணம் செய்யாமல் செய்த தவறை சீமானும் செய்யக்கூடாது. சீமானை பார்த்தாவது திருமாவும் திருமணம் செய்வது நல்லது!
காமாட்சி

swaminathan
25 July 2012 at 23:48

engal uyirinum melana thamil thalaivar, senthamilan seeman-in thirumana sethi keyttu, ullam poorithom. valga nee - emman,
iv vaiyathul puhal petru!
valrga em, senthamil seeman- nee
prabancha peru petru!!
seemanin tharkolai padai thalapathy,
g.swaminathan senapathy.

26 July 2012 at 07:46

சீமான் அண்ணா, நீங்கள் நடித்த கண்டுபிடி கண்டுபிடி படம் எப்போது வெளியாகும்? அண்ணனை கரம்பிடிக்கும் அண்ணியாரே வாழ்க....

26 July 2012 at 18:20

Engal kulakkozhunthe... Annanai aalap pirantha anniye... Vazhthukiren ummai.

மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...

இடும்பாவனம் கார்த்திக்
5 August 2012 at 00:06

அண்ணனே, அண்ணியை பற்றி அறிவிக்கும் வரை, இது போன்ற செய்திகளை நம்பாதீர்கள் உறவுகளே..!
சில ஊடகங்கள் தங்கள் சுய விளம்பரதிற்காக இது போன்ற செய்திகளை பரப்புகின்றன...

5 August 2012 at 10:07

தங்களின் கருத்துக்கு நன்றி கார்த்திக். எந்த செய்தியையும் சரிவர ஆராயாமல் பரபரப்புக்காக சீமான் குறித்து எழுதும் நோக்கம் எமக்கு இல்லை. கும்பல் வெளியிட்டிருக்கும் செய்தி நூற்றுக்கு நூறு உண்மை என்பதை வரும் அக்டோபர் முதல் தேதி நீங்கள் உணர்வீர்கள். சீமான் மணக்கவிருக்கும் மணமகள் கயல்விழியின் புகைப்படத்தை விரைவில் கும்பல் இணையதளம் பெருமையோடு வெளியிடும்.

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலா??

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger