'அக்காவை விட்டு விலக மாட்டேன்' பேட்டிக்கு தயாராகும் சசிகலா
சசிகலா ஜெயலலிதா உறவு ஒரேயடியாக பிரிந்து விட்டதாக மீடியாக்கள் செய்தி பரப்பயபடி இருக்கின்றன. ஆனால், சசிகலாவின் தரப்பு சொல்லும் செய்திகள் படுபயங்கரமாக இருக்கின்றன. 'நான் அக்காவை விட்டு பிரியவே மாட்டேன். என் கணவர் நடராஜன் வீட்டில் தங்க மாட்டேன் . சீக்கிரமே அக்கா என்னை அழைப்பார்' என உறுதியாக சொல்லி வருகிறார் சசிகலா.
'இன்றைக்கு கார்டனில் உலா வரும் சோ போன்றவர்கள் கடந்த ஐந்து வருடங்களில் எங்கே போய் இருந்தார்கள்? கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கூட்டணிப் பற்றி பேசவோ, வழி நடத்தவோ சோ வந்திருக்க வேண்டியதுதானே... சிறைபட்ட காலத்தில் கூட ஜெயலலிதாவின் பெயரை சொல்லாமல் அவரைக் காப்பாற்றியவர் சசிகலா. அவருடைய தியாகத்துக்கு முன்னாள் நிற்கும் தகுதி படைத்தவரா சோ? ' என்கிறார்கள் சசிகலாவின் உறவினர்கள்.
பார்க்கலாம்... ஜெயிக்க போவது முக்குலமா? இல்லை பெல்ட் பாம் புள்ளிகளா?
Labels:
தமிழகம்

+ comments + 2 comments
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Paarkalam..!
Post a Comment