Latest Movie :

''கடைசி ஆசை கண்ணை மூடுவதுதான்!" தூக்கு கயிற்றை முத்தமிட்ட கசாப்!

ருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது தீவிரவாதி கசாப் விவகாரம். இன்று காலை 7.30 மணிக்கு கசாப் தூக்கிட்டுக் கொல்லப்பட்டான்.

கடந்த 2008-வது வருடம் மும்பை ரயில் நிலையத்திலும் தாஜ் ஹோட்டலிலும் வெறித்தாண்டவம் ஆடி பலரையும் கொன்று குவித்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் பத்து பேர்களில் ஒருவன் கசாப். மற்றவர்கள் தப்பித்துவிட, சிக்கிய கசாப்பிடம் கடுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடைசிவரை வாய் திறக்காமல் அதிகாரிகளை ஆட்டிப்படைத்த கசாப், தனக்கான உணவு தொடங்கி மருத்துவ சிகிச்சை வரை ஸ்பெஷலாக வேண்டும் என டிமான்ட் காட்டி கலங்கடித்தான். இந்நிலையில் தாக்குதல் விவகாரத்தை விசாரித்த தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து கசாப் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றமும் தூக்கி உறுதி செய்ய, கடந்த செப்டம்பர் மாதம் இந்திய ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினான் கசாப். கடந்த நவம்பர் 8-ஆம் தேதி கருணை மனுவை நிராகரித்து பிரணாப் முகர்ஜி உத்தரவிட, மும்பை சிறையில் இருந்து புனேயில் உள்ள எரவாட சிறைக்கு கொண்டு வரப்பட்டான் கசாப்.


இன்று காலை 7.30 மணிக்கு தூக்கு கயிறு முன்னால் நிறுத்தப்பட்டான் கசாப். 'உனது கடைசி ஆசை என்ன" என அதிகாரிகள் கேட்க, 'கண்ணை மூடுவதுதான் கடைசி ஆசை' எனச் சொல்லி கயிற்றை முத்தமிட்டவன் உடனே அதனை மாட்டச் சொல்லி இருக்கிறான். தூக்கு கயிற்றுக்கு முன்பும்  துடிப்பு அடங்காமல் பேசிய கசாப்பை பார்த்து அதிகாரிகளே ஒருகணம் திகைத்துப் போயிருக்கிறார்கள். தீவிரவாதிகளின் மூளைச் சலவையால் வாழ வேண்டிய வயதில் கயிற்றுக்கு உயிரை விட்ட கசாப் ஒருவிதத்தில் பரிதாபத்துக்கு உரியவன்தான்!
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger