வைகோவுடன் மனவருத்தம் கொண்டு மீடியாக்களிடம் அனல் கிளப்பி வரும் ம,தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் மீண்டும் தாய்க் கழகத்துக்கே திரும்ப இருக்கிறார். நாஞ்சில் சம்பத் தி.மு.க.வில் இணைய விருப்பம் தெரிவித்திருப்பதாக தி.மு.க. தலைமைக்குச் சொல்லப்பட, கருணாநிதி எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லையாம். இதனையே க்ரீன் சிக்னலாக எடுத்துக்கொண்டு அவரைத் தாய்க் கழகத்துக்கு இழுத்துவர அனைத்துவித ஏற்பாடுகளையும் செய்து வருகிறார் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன்.
நாஞ்சில் சம்பத்தை கட்சியை விட்டு நீக்கினால் அவர் நீதிமன்றத்துக்குப் போவார் எனத் தெரிய வந்ததால், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கும் நிலையில் வைகோ இல்லை. நாஞ்சில் தாயகத் தலைமைக்கு அனுப்பி இருக்கும் தன்னிலை விளக்கத்துக்கும் வைகோ எவ்விதமான பதிலும் அனுப்பவில்லை. வெளியேறும் நேரத்தில் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியே தீருவது என்பதில் நாஞ்சில் சம்பத் உறுதியாக இருந்தார். அதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் வைகோவும் உறுதியாக இருக்கிறார். அதனால், கருணாநிதி அழைப்பு விடுக்கும் நாளில் தாய்க் கழகத்தில் இணைகிறார் நாஞ்சில் சம்பத்.
தி.மு.க.வை திட்டிய நாக்கு ம.தி.மு.க.வை நோக்கி மடங்க இருக்கிறது. நாஞ்சில் தமிழ்...... இனி நஞ்சில் தமிழ்!
- எம்.சபா

''அது நாற வாயி...
இது வேற வாயி!''
தி.மு.க.வை திட்டிய நாக்கு ம.தி.மு.க.வை நோக்கி மடங்க இருக்கிறது. நாஞ்சில் தமிழ்...... இனி நஞ்சில் தமிழ்!
- எம்.சபா

+ comments + 1 comments
துரோகிகளுக்கு அப்படி தான் பாடம் கற்ப்பிக்க வேண்டும்.
Post a Comment