
விஸ்வரூபம் படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடியைத் தாண்டி இருக்கிறது.

படத்துக்கு தமிழ், இந்தி எனச் சேர்த்து 3000 பிரிண்டுகள் தயாராகி வருகின்றன.

பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் விஸ்வரூபம் ஷூட்டிங் நடந்து முடிந்திருக்கிறது.

Aura 3D என்கிற ஒலிப்பதிவு தொழில்நுட்பத்தை ஆசியாவிலேயே முதல் ஆளாகவும், உலகளவில் இரண்டாவது ஆளாகவும் பயன்படுத்தி இருக்கிறார் கமல்.

தனது படத்தின் ஒலிப்பதிவை வெளியிட இருக்கும் நாளில் 'மையம்' என்கிற இணையப் பத்திரிக்கையை ஆரம்பிக்க இருக்கிறார் கமல்.

பாடல் வெளியீட்டு விழா விஜயவாடா விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் நடக்க இருக்கிறது.

கமலின் ஹாலிவுட் படத்தை தயாரிக்க இருக்கும் Barrie Osborne விஸ்வரூபம் படத்தின் அறிமுகக் காட்சியை லாஸ் எஞ்சல்ஸ் நகரில் திரையிட சொல்லியிருக்கிறாராம்.
Post a Comment