ஜெயலிதாவின் ஒரு மணி நேர தியானம்!
தமிழகமே பாராட்டுகிறது... கட்சிக்காரர்கள் கொண்டாடுகிறார்கள்... அதிகாரிகள் ஆனந்த பெருமூச்சு விடுகிறார்கள். ஆனாலும், 25 வருட நட்பை இழந்து வாடும் முதல்வருக்கு மட்டும் தான் சசிகலாவின் அருமை தெரியும். குற்றசாட்டோ... குடுமிப்பிடியோ... சசிகலாவும் அவருடைய உறவுக்காரர்களும் ஒருவழியாக கார்டனை விட்டு வெளியேறிவிட்டார்கள். இத்தனை காலம் சசிகலாவின் கவனிப்பில் வாழ்ந்து வந்த ஜெயலலிதா இப்போது எப்படி இருக்கிறார் என்பது தான் எல்லோருடைய கேள்வியும்.
சாப்பாடு, மருந்து மாத்திரை, குறிப்பிடத்தக்க கட்சிப் பணிகள் சில, வழக்குகள் உள்ளிட்ட சில விவகாரங்களில் மட்டும் தான் ஜெயலலிதா சசிகலா இருவரும் கலந்து ஆலோசிப்பார்கள். மற்றபடி, சசிகலா கார்டனில் இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் இருவரும் பேசாமல்தான் இருப்பார்களாம். புத்தகங்களும், வெளிநாட்டு சினிமா டி.வி.டி.க்களும் தான் முதல்வரின் பொழுதுபோக்கு வாய்ப்புகள்.
சசிகலா நீக்கத்துக்குப் பிறகு சில நாட்கள் மட்டுமே முதல்வரின் முகத்தில் வருத்தம் தெரிந்தாக சொல்கிறார்கள். கடந்த சில நாட்களாக காலை ஏழு மணியில் இருந்து எட்டு மணி வரை பூஜை அறையில் தியானத்தில் அமர்கிறார் ஜெயலலிதா. ஒரு மணி நேரத்துக்குப் பிறகே பூஜை அறையை விட்டு வெளியே வருகிறாராம். மன ரீதியான ஆறுதலுக்காகவும், சிந்தனையை வலுவாக்கவும் ஜெ., இப்படி தியானப் பயிற்சி மேற்கொள்வதாக சொல்கிறார்கள் கார்டன் நிலவரம் அறிந்தவர்கள்.
குஜராத் நர்ஸ் அம்மாவுக்கு உதவியாக இருக்கிறார், சோவின் மகன் ஸ்ரீராம் கார்டனில் பணியாற்றுகிறார் என்பதெல்லாம் வெறுமனே பரரபு செய்திகள் தானாம். அப்படி எல்லாம் கார்டனில் புது ஆட்களின் நடமாட்டம் இல்லை என்ற சொல்கிறார்கள்.
இளவரசி எப்போதாவது வந்து செல்கிறாராம். இளவரசியின் மருமகன் டாக்டர் சிவகுமார் தான் முதல்வருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்பவர். அவரும் அவ்வபோது வந்து செல்கிறாராம். சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகளான அனுராதாவுக்கு எப்போதாவது கார்டனில் இருந்தே அழைப்பு போகிறதாம். முதல்வர் கேட்கிற விவரங்களை மட்டும் அனுராதா சொல்கிறாராம்.
தனிமரமாகிவிட்ட வருத்தமோ வாட்டமோ இல்லாமல் மிக உற்சாகமாக முதல்வர் செயல்படுவதற்கு அவர் கடைபிடிக்கத் தொடங்கி இருக்கும் ஒரு மணி நேர தியானமே காரணம் என்கிறார்கள் கார்டனில்.
- KUMBAL




Post a Comment