2011- ன் சிறந்த மனிதர் வைகோ! - விகடன் விருது
2011 ஆண்டின் சிறந்த மனிதர்களை பட்டியல் போட்டு இருக்கிறது ஆனந்த விகடன் வார இதழ். அதில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு இரண்டாவது இடம் கிடைத்து இருக்கிறது. லட்சக்கணக்கான வாசகர்களின் வாக்களிப்பில் வைகோவுக்கு இந்த விருது கிடைத்து இருக்கிறது. வைகோவின் சமீபத்திய போராட்டங்களை வரிசைப்படுத்தி இருக்கும் விகடன், 'வைகோ ஒரு போராட்ட புயல்' என பாராட்டு பத்திரம் கொடுத்து இருக்கிறது.
உலகத் தமிழர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்திருக்கும் விகடனின் பாராட்டு வார்த்தைகளை நீங்களும் படியுங்களேன்.
தமிழகத்தின் ஓயாத அலைகள்!
தேர்தல் அரசியலையே தூக்கி வீசிவிட்டு தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்னைக்காகவும் வீறுகொண்டு முன் நின்ற வைகோ மீது மரியாதை பெருகி இருக்கிறது. தூத்துக்குடியின் தூய்மைக்காக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து இவர் பற்ற வைத்த விசாரணை நெருப்பு இன்னும் தணியவில்லை. பேரறிவாளன், முருகன், சாந்தன் மீதான தூக்குத் தண்டனையை எதிர்த்து நீதிமன்றங்களில் கரும்புலியாக உலவினார். விடுதலைப் புலிகள் மீதான தடையை தகர்க்கவும் இவரே வழக்கறிஞர் ஆனார். முல்லைப் பெரியாறு பிரச்சனையில் எல்லைகளை மறிக்கும் போராட்டத்தில் இவர் குதித்ததும் தான் கேரளா அரசு மிரண்டது. சட்டமன்றத்தில் கட்சிக்கு ஒரு இடம் கூட இல்லை. ஆனாலும், அந்தக் கவலையே இல்லாமல் தமிழக நலனுக்காக முழக்கமிட்டு உழைக்கிறார். இலக்கியம், அரசியல், போராட்டம் என சோதனைகளுக்கு நடுவே இவரது இருப்பு மதிப்புக்கு உரியது. பதவிகளுக்கும் பேரங்களுக்கும் சமரசங்களுக்கும் இரையாகிக் கிடக்கும் தமிழக அரசியலில் வைகோ... ஒரு போராட்ட புயல்!
தன்மானத் தமிழராக விகடனின் விருதை பெற்றிருக்கும் வைகோவை நாமும் வாழ்த்துவோம்.
Labels:
தமிழகம்


+ comments + 3 comments
வைகோவிற்கு வாழ்த்துக்கள்! போராட்டத்திற்கு அதிகாரம் அவசியமில்லை என்று அனைத்து அரசியல்வாதிகளும் இனியாவது வைகோவை பார்த்து தெரிந்து கொள்வார்களா...?
Great personality
comedy men
Post a Comment