பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான கும்கி படம் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தைத் தயாரித்தவர் இயக்குனர் லிங்குசாமி. படம் முழுக்க யானை இடம்பெற்றதால் தயாரிப்பு செலவு திட்டமிட்டத்தைக் காட்டிலும் அதிகமானது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாத லிங்குசாமி பணத்தை வாரி இறைத்தார். பாடல் வெளியீட்டு விழாவுக்கு ரஜினியை வரவழைத்து பிரமாண்டம் காட்டினார். படத்தைப் பற்றி மீடியாக்கள் மத்தியில் பரபரப்பான செய்திகளை பரப்பினார். படத்துக்கு அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பு கிளம்பிய நிலையில், திடீரென படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு விற்று விட்டார் லிங்குசாமி.
'நல்ல படம்' எனப் பலரும் பாராட்டும் நிலையில், படத்துக்கான எதிர்பார்ப்பு விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரிதாகக் கிளம்பியிருக்கும் நிலையில் லிங்கு இந்த முடிவை எடுத்தது ஏன்?
லிங்கு தற்போது சூர்யாவுக்கு கதை சொல்லி இருக்கிறார். சூர்யா சிங்கம் - 2 படத்துக்கு அடுத்தபடியாய் லிங்குசாமியின் படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது. அந்தப் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. சூர்யா படத்துக்கு இன்றைய நிலையில் இருக்கும் வியாபாரம் மிகப் பெரிதானது. கோடான கோடி கைக்கு அருகே இருக்கையில், கும்கியை வைத்து எத்தனை கோடி சம்பாதித்துவிட முடியும் என எண்ணியிருக்கிறார் லிங்கு. உடனே கும்கியை ஞானவேல் ராஜாவுக்கு கைமாற்றிவிட்டு, அதிலும் இரண்டு கோடிகள் லாபம் பார்த்து, அடுத்தபடியாய் சூர்யாவை வைத்து கல்லாவை நிரப்பவும் தயாராகி விட்டார் லிங்கு. இதில் ரொம்பவே ஏமாந்து போனவர் பிரபு சாலமன்தான்.
''படம் பண்றவங்களுக்கு மத்தியில, படமும் பண்ணி பணமும் பண்ற ஆளா இருக்காரே லிங்கு!" - இது கோடம்பாக்கப் பொருமல்!

+ comments + 1 comments
லிங்கு ஊதிய சங்கு........ தலைப்புக்கும் மேட்டருக்கும் சம்பந்தமே இல்லையே......
துரை
Post a Comment