இந்தியாவே எதிர்பார்க்கும் பாலாவின் பரதேசி படம் குறித்த 10 முத்தான செய்திகள்...
பரதேசி படத்துக்கு பாலா முதலில் வைத்த தலைப்பு 'சனிபகவான்' இரண்டாவதாக வைத்த தலைப்பு 'கல்லறைத்தோட்டம்' இறுதியாகத்தான் பரதேசி ஓகே ஆனது!
கதாநாயகர்களை சக்கையாகப் பிழிந்தெடுக்கும் வழக்கமுடைய பாலா இந்தப் படத்தில் அதர்வாவை ஒரு வார்த்தைகூட திட்டவில்லை. பலமுறை ரீடேக் வாங்கிய போதும் மிகுந்த அமைதியோடு அதர்வாவுக்கு சொல்லிக் கொடுத்தார் பாலா!
பரதேசி படத்துக்கு அடுத்தபடியும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களையே உடன் வைத்துக்கொள்ளும் திட்டத்தில் இருக்கிறார் பாலா!
பரதேசி படத்துக்காக முதன் முறையாய் ஜீ.வி.பிரகாஷ் உடன் இணைந்திருக்கிறார் பாலா. ஆனாலும், படத்தின் இறுதி வடிவத்தை இளையராஜாவின் ஆசிக்குப் பிறகே பிறரிடம் காட்டும் முடிவில் இருக்கிறார் பாலா!
''பாலா... வெட்கத்தை விட்டுக் கேட்கிறேன். அடுத்த படத்திலும் எனக்கு வாய்ப்பு வழங்குங்கள்!" எனச் சொல்லி இருக்கிறாராம் பாலாவுடன் முதன் முறையாக இணைந்திருக்கும் வைரமுத்து. அடுத்த படத்திலும் வைரமுத்துக்கே வாய்ப்பு என்கிறார்கள்.
தேயிலைத் தோட்டத்தில் இருந்து தப்பிப்பவர்களின் குதிகால் நரம்பை வெட்டும் காட்சி படத்தில் தத்ரூபமாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாம். பார்ப்பவர் மனங்களைத் துடிக்க வைக்கும் காட்சி என்கிறார்கள் 'பரதேசி' யூனிட்டில் உள்ளவர்கள்.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை ஷூட் செய்த போது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதுவிட்டாராம் பாலா.
கோணியை உடையாக அணிந்து வாழும் தேயிலைத் தொழிலாளியின் பாத்திரத்தில் கலங்கடித்திருக்கும் அதர்வா, பாலாவின் நினைவாய் அந்த ஆடையை அப்படியே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.
ஷூட்டிங் நடந்த சோத்துப்பாறை ஏரியாவில் உள்ள சுடுகாட்டில் இரண்டு நாட்கள் படுத்து உறங்கி இருக்கிறார் பாலா.
பாலா மிகக்குறுகிய காலத்தில் எடுத்த ஒரே படம் பரதேசிதான். அடுத்தடுத்த படங்களையும் இதே வேகத்தில் செய்ய முடிவெடுத்திருக்கிறார் பாலா!
Post a Comment