இளையராஜா அவர்களுடைய இசை நிகழ்ச்சி கனடாவில் மாவீரர் மாதத்தில் நடைபெற இருக்கின்றது. தமிழர்களுக்கு மாவீரர் மாதம் என்பது மிகவும் உணர்வுப்பூர்வமான நாட்களாக இருக்கும். எழுத்தில் வடிக்க முடியாத மாவீரர்களின் தியாகங்களை மக்கள் போற்றி வணங்கும் மாதம் இந்த மாதத்தில் களியாட்ட நிகழ்வுகள் நடத்துபவர்கள் உண்மையான தமிழனாக இருக்க மாட்டார்கள் என ஆவேசமாக தெரிவித்து இருக்கிறார் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்.
''இளையராஜா மாபெரும் இசை மேதை என்பதை தமிழர்கள் யாரும் மறுக்க முடியாது. ஆனால், தமிழர்களின் உணர்வறியாது இளையராஜா கனடாவுக்கு இசை நிகழ்ச்சி நடத்தப் போவது இழவு வீட்டில் இசை பாடுவதற்கு சமமானது" என கடுமையாக கண்டித்து இருக்கிறார் சீமான்.
இதையும் மீறி இளையராஜா கனடாவுக்கு சென்றால் அவர் சென்னைக்கு திரும்பும் போது மிகுந்த சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதையும் நாம் தமிழர் இயக்கம் எச்சரிக்கையாக சொல்லி இருக்கிறது.
''இளையராஜா அவர்கள தனக்கு இருக்கும் மரியாதையை காப்பற்றிக் கொள்ள உடனடியாக நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அல்லது வேறு மாதத்திற்கு மாற்றிவிட்டு, தமிழர்களை காயப்படுத்த இருந்ததற்காக தனது வருத்தத்தையாவது தெரிவித்துவிட்டு இந்தியா திரும்பட்டும். இல்லையெனில் கனடாவாழ் தமிழர்கள் இளையராஜாவுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் இது உறுதி." என கண்டிக்கிறார்கள் தமிழீழ புரட்சிகர மாணவர்கள்.
இதையும் மீறி இளையராஜா செல்வாரா என்பதுதான் தற்போதைய கேள்வி!

Post a Comment