Latest Movie :

தனி சேனல் தொடங்குகிறார் விஜய்!

டிகர் விஜய் தனி தொலைக்காட்சி சேனல் தொடங்க இருக்கிறார். இதுகுறித்த பேச்சுவார்த்தை சன் டி .வி. புகழ் சக்சேனா உடன் நடந்து வருகிறது. உடல் நிலை சரியில்லாமல் தற்போது சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட்டாகி இருக்கும் எஸ்.ஏ .சந்திரசேகர் தன் மகனை அரசியலில் களமிறக்கியே தீருவது என்கிற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதற்கான முன்னோட்டமாக தனி தொலைகாட்சி தொடங்கும் வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. சேனலுக்கு 'வெற்றி' எனப் பெயரிடப்பட்டு உள்ளது. 
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தார் விஜய். ஆனால் அந்த விசுவாசத்தை மறந்த ஜெயலலிதா தங்கள் தரப்புக்கு பெரிதாக உதவவில்லை என நினைக்கிறார்  எஸ்.ஏ .சந்திரசேகர். இதன் எதிரொலியாக இன்னும் சில தினங்களில் தனது தயாரிப்பாளர் சங்க நிர்வாகப் பொறுப்பை ராஜினாமா செய்ய இருக்கிறார் எஸ்.ஏ .சந்திரசேகர். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலேயே விஜய்யின் அரசியல் பிரவேசத்தை ஆரம்பிக்க வைக்க எஸ்.ஏ .சந்திரசேகர் தீவிரமாக இருக்கிறாராம். அதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தல் சினிமா வட்டாரத்திலும் களைகட்டும் என்கிறார்கள் விபரப்புள்ளிகள்.
வாங்க விஜய் வாங்க..! 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger