'தாண்டவம்' படத்துக்கு அடுத்தபடியாய் விஜய்க்கு தலைவன் என்ற தலைப்பில் கதை சொல்லி இருந்தார் இயக்குனர் விஜய். ''நான் கதை சொல்லத் தொடங்கிய பத்தாவது நிமிஷமே நான் நிச்சயம் பண்றேன் என சொல்லி என்னைத் திக்குமுக்காட வைத்து விட்டார் விஜய். அடுத்த மாதமே தலைவன் ஷூட்டிங் ஆரம்பம்'' என பேட்டி கொடுத்து அசத்தினார் இயக்குனர் விஜய்.
இடையில் இரு விஜய்களுக்கும் என்ன பூசல் வந்ததோ... துப்பாக்கி ரிலீஸ் வரை 'தலைவன்' படம் குறித்து ஏதும் பேச வேண்டாம் என சொல்லி இருக்கிறார் நடிகர் விஜய். திபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகயிருக்கும் துப்பாக்கி படம் விஜய்க்கு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருப்பதால்தான் தலைவன் பேச்சுவார்த்தையைத் தள்ளிப்போட்டிருப்பதாக சொல்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.
ஆனால், தாண்டவம் படத்தின் கடுமையான தோல்விதான் நடிகர் விஜய்யை பயமுறுத்தி இருப்பதாக சொல்கிறார்கள் அவருடைய ரசிகர்கள். அதேபோல் தாண்டவம் படத்தில் ஏற்பட்ட கதை பஞ்சாயத்தை போல தலைவன் படத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறாராம். இதனால் படத்தின் பேச்சுவார்த்தை மட்டுமே தள்ளிப்போகுமா... இல்லை, படமே தள்ளிப்போகுமா என்பது புரியாமல் திண்டாடுகிறார் இயக்குனர் விஜய்.
- சினிமாக்காரன்

Post a Comment