டி.என்.பி.எஸ்.சி. செயலாளராக மிகச் சிறப்பாகப் பணியாற்றிய உதயசந்திரன் அதிரடியாக தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் நடந்த பலவிதமான குழப்பங்களையும் முடிவுக்குக் கொண்டுவந்து சமீப காலமாக தேர்வுகளை திறம்பட நடத்தி வந்த உதயசந்திரன் தமிழ்நாடு சிறு தேயிலை தொழில் கூட்டுறவு தொழிற்சாலை சங்க நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். முக்கியத்துவம் இல்லாத இந்தப் பதவிக்கு உதயசந்திரன் நியமிக்கப்பட்டிருப்பது அதிகாரிகள் வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. கடந்த ஆட்சியில் கொடநாடு பங்களா ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருப்பதாக புகார் வந்தபோது நேரடி விசாரணை நடத்தியவர் உதயசந்திரன். கொடநாடு பங்களாவுக்கு போய் ஜெயலலிதாவிடம் நேரடியாக நோட்டிஸ் கொடுத்தவர். இந்த வருத்தங்களை எல்லாம் மறந்து விட்டுத்தான் அவரை டி.என்.பி.எஸ்.சி. செயலாளராக நியமித்திருந்தார் ஜெயலலிதா.
தற்போதைய மாற்றத்துக்கு அதிகாரிகள் மத்தியில் நடக்கும் பவர் பாலிடிக்ஸ் தான் காரணம் என்கிறார்கள். இன்னும் சிலரோ, 'இந்த ஆட்சியில் நடக்கும் பலவிதமான குளறுபடிகளை உதயசந்திரன் வெளிப்படையாகப் பேசினார். அதனைப் பத்திரிக்கையாளர்களிடமும் பகிர்ந்து கொண்டார். இதுதான் அவருக்கு சிக்கலைக் கொடுத்து விட்டது'' என்கிறார்கள்.
எது உண்மை என்பது அம்மாவுக்கே வெளிச்சம்!

Post a Comment