அஜித்தின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பு ஏ.எம்.ரத்னத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பில்லா -2 படத்தில் மிகுந்த சரிவுக்கு ஆளான அஜித் புதுமுக இயக்குனர்களையோ சாதாரண தயாரிப்பாளர்களையோ வைத்து படம் எடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். அதன்படியே 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அடுத்த படத்தைத் தயாரிக்க ஏ.எம்.ரத்னம் தான் சரிப்படுவார் என்பதில் உறுதியாக இருந்த அஜித் அவர் பெயரையே டிக் செய்திருக்கிறார். படத்தை இயக்க இருப்பது இயக்குனர் விஷ்ணுவர்த்தன் என்பதும் உறுதியாகி விட்டது.
படத்துக்கு சரியான டைட்டிலை வைப்பதற்கு தீவிர டிஸ்கஷனில் மூழ்கி இருக்கும் படக்குழு நூற்றுக்கு மேற்பட்ட பெயர்களை எழுதி காண்பித்து இருக்கிறது. ஆனால், தான் யோசித்து வைத்திருக்கும் 'கர்வம்' என்கிற டைட்டிலை ஒத்த பெயரைக் கேட்கிறார் அஜித். அதனால், தலைப்பு மட்டும் இப்போதைக்கு இழுபறியாக இருக்கிறது.
படத்தின் முதற்கட்ட போட்டோ ஷூட் முடிந்திருக்கும் நிலையில், அடுத்தகட்ட வேலைகளில் விஷ்ணுவர்த்தன் - ஏ.எம்.ரத்னம் டீம் தீவிரமாக மூழ்கி இருக்கிறது. விரைவில் அஜித்தின் வெளிப்படையான அறிவிப்பில் ஏ.எம்.ரத்னம் - விஷ்ணுவர்த்தன் கூட்டணி ஷூட்டிங் ஸ்பாட்டில் களமிறங்கும். அஜித்தின் புது அவதாரப் புகைப்படங்களும் விரைவில் வெளிவரும்!

Post a Comment