Latest Movie :

வெல்கம் டக்ளஸ்...!

''சார், இதுதான் உங்க டக்குன்னா..." -கருணாஸ் பேசுகிற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.  1986-ம்  ஆண்டு சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவர் கொலை செய்யப்பட வழக்கை இன்றுவரை சூப்பர் வேகத்தில் நடத்தி வருகிறது சென்னை உயர் நீதி மன்றம். இந்த கொலை வழக்கில் 'காட்டிக்கொடுப்பு' புகழ் டக்ளஸ் தேவானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைதானார். 1990-ம்  ஆண்டு வரை கோர்ட்டில் ஆஜராகி வந்த டக்ளஸ் தேவானந்தா அதன் பிறகு இலங்கைக்கு ஜூட் விட்டார்.


இன்றுவரை இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா சர்வசாதாரணமாக டெல்லிக்கு வருகிறார்... மேன்மை பொருந்திய பாரதப் பிரதமரை சந்திக்கிறார். நம்முடைய நாடாளுமன்ற உருப்பினர்கள் இலங்கைக்கு செல்கிறார்கள்; அங்கே டக்ளஸ் தேவானந்தா வரவேற்கிறார். விருந்தளிக்கிறார். ஒரு கொலைக் குற்றவாளிக்கு நாம் வழக்கும் ராஜ மரியாதைகள் இவை.

இந்நிலையில் டெல்லி வந்த டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குப் போட்டார் புகழேந்தி என்பவர். அதில் தொடங்கியது டக்ளசுக்கு டர்! தன் மீதான பிடிவாரண்டு தளர்த்தப்படாத நிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரணைக்கு உடன்படுவதாக மனு போட்டார் டக்ளஸ் தேவானந்தா. ஆனால், அதனைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதி மன்றம் டக்ளஸ் தேவானந்தாவை உடனே நேரடி விசாரணைக்கு வரச்  சொல்லி இருக்கிறது. சட்ட போராட்டத்தை எதிர்கொள்வதில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால், சென்னைக்கு வந்தால் தனக்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்பது டக்ளஸ் அறியாதது அல்ல!
அந்த வரவேற்பை அவர் எதிர்கொள்ளும் நாள் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. இனத்தைக் காட்டிக்கொடுத்து பதவி சுகத்தில் வலம்  வரும் ஒரு தமிழனை சீக்கிரமே சென்னையில் பார்ப்போம்.  அவனால் நடந்த ஒரு கொலைக்காக அல்ல...  ஒரு லட்சம் கொலைகளுக்காக!
Share this article :

+ comments + 2 comments

sisu
19 October 2012 at 22:23

vada vaa... ne varanum... varuva!

Anonymous
20 October 2012 at 05:36

பிரமாதம் கும்பல்... இந்த நாயை இப்படித்தான் அடிக்கணும்... பின்னிட்டீங்க... இவன் வரும் நாளில் முதல் ஆளாக செருப்போடு சென்னை கோர்ட்டில் நிர்பென். வாப்பா டக்லஸு வா...
பி.மகேந்திரன்

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger