Latest Movie :

ஆதீனங்கள் விலகல்... அதிரடி பின்னணி!

ப்பாடா... ஒருவழியாக உயிரும் உணர்வுமாக ஒன்றிணைந்து இருந்த மதுரை ஆதீனத்தையும் நித்தியானந்தா சாமிகளையும் பிரித்துக் காட்டிவிட்டது தமிழகத்தின் சட்ட திட்டங்கள். சமூகக் கடமையோடு பங்காற்றும் தமிழக மீடியாக்களுக்கும் இந்த நிகழ்வில் மிக முக்கிய பங்கு உண்டு. இத்தனை காலம் எங்களைப் பிரிக்க முடியாது... எங்கள் அன்பை உடைக்க முடியாது என்றெல்லாம் சவால்விட்ட மூத்த ஆதீனம் திடீரென நித்தியானந்தா சாமிகளை டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்திருப்பது உங்களையும் பக்தகோடிகளையும் வேண்டுமானால் அதிர வைத்திருக்கலாம். ஆனால் இந்த முடிவை மதுரை ஆதீனமும் நித்தியானந்த சாமிகளும் இணைந்து பேசியே எடுத்தார்கள் என்பதுதான் உண்மை.

உயர் நீதி மன்றத்தில் நித்தியானந்தா நியமன விவகாரம் தீவிரம் எடுத்து வருகிறது. இந்நிலையில் அரசுத் தரப்பும் திடிரென ஆதீனத்துக்கு அதிரான நிலைப்பாட்டை எடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது அதற்கான மனுவை இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் ராஜாராம் மூலமாக கோர்டில் தாக்கல் செய்ய வைத்தது தமிழக அரசு. இதன் அறிவார்ந்த பின்னணி வேறு ஒன்றும் இல்லை... ஆட்சிபீடத்தின் எரிச்சல் பார்வையில் இருக்கும் நடராஜனுக்கும் மதுரை ஆதீனத்துக்கும் எப்போதுமே ஒரு நெருக்கம் உண்டு. இதன் பின்னணியில் பண ரீதியான தொடர்புகள் நிச்சயம் இருக்கும் என நினைக்கிறது ஜெ .அரசு. இதன்  பிறகுதான் மதுரை ஆதீனத்தை மடக்கும் வேலைகள்   அரசுத் தரப்பால் தீவிரப்படுத்தப்பட்டன.

இது தெரிந்தே இரு ஆதீனங்களும் சுமூகமாகப் பேசிப் பிரிய முடிவெடுத்தனர். 'இப்போதைக்குப்   ஊர் உலகுக்காகப் பிரிந்திருப்போம்... அரசு நிலைப்பாடு மாறிய பின்னர் நாமும் இணைவோம்' என மனமொத்த பறவைகளாகப் பேசியே இருவரும் பிரிந்து இருக்கிறார்கள்.

வெறுமனே ராஜினாமா என எழுதி வாங்கினால் அது சரிப்படாது என எண்ணி டிஸ்மிஸ் அறிவிப்பை வெளியிட்டு மீடியாக்களை நம்ம வைத்திருக்கிறார் மதுரையார். அவரும் ஒரு காலத்தில் மாலை முரசு நிருபராகப் பநியாற்றியவர்தானே... அந்த அனுபவம் கைகொடுத்திருக்குமோ என்னவோ! 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger