Latest Movie :

சின்மயி புகார்... சிக்கினார்கள் இணைய வல்லூறுகள்!

''பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களில் எனக்கு எதிரான விமர்சனங்கள் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. இரண்டு வருடங்களாக சில இணையதல பொறுக்கிகள் என்னை மிரட்டுகிறார்கள். பணம் கேட்கிறார்கள்; திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். உண்மையான பெயர்களிலும், போலியான பெயர்களிலும் என்னை விமர்சிக்கும் இணையதள மிரட்டல் புள்ளிகளை கைது செய்யுங்கள்!" - சில தினங்களுக்கு முன் பாடகி சின்மயி கண்ணீரோடு கமிஷனர் ஜார்ஜிடம் கொடுத்த புகார் இது.
புகாரோடு மட்டும் அல்லாமல் தன்னை மிரட்டிய இணையதள புள்ளிகளின் இணைய முகவரிகளையும் போலீஸ் வசம் கொடுத்திருக்கிறார் சின்மயி. சைபர் க்ரைம் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்ட புகார் தற்போது எஸ்.பி.ஜெயகௌரி தலைமையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் ஆறு பேரின் இணைய முகவரிகள் விசாரிக்கப்பட்டு, அவர்களின் இருப்பிட முகவரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதனால், சின்மயிக்கு இனிமேல் மிரட்டல் தொந்தரவு இருக்காது என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
    
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger