அரசுப் பள்ளிகளின் அவலத்தையும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான தேவையையும் வலியுறுத்தி விரைவில் வெளிவர இருக்கும் 'சாட்டை' படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் கதாநாயகனாக நடிக்கும் இயக்குனர் சமுத்திரகனி படம் வெளியாவதற்கு முன்னரே படத்தின் இயக்குனர் அன்பழகனுக்கு அசத்தலான ஒரு பரிசைக் கொடுத்து யூனிட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.
''அன்பழகன் வொர்க் பண்ணும் விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கதையோட நேர்த்தி, படம் பண்ணும் விதம்னு சகலத்திலும் அன்பழகன் வியக்க வைக்கிறார்" என மொத்த யூனிட்டையும் அழைத்து அன்பழகனை பாராட்டிய சமுத்திரகனி, சட்டென ஒரு ப்ளாங் செக்கை எடுத்து அவரிடம் கொடுத்திருக்கிறார். ''நீ எப்போது வேண்டுமானாலும் என் கம்பெனிக்கு படம் செய்து கொடுக்கலாம். உன்னுடைய படத்தை தயாரிக்க நான் எப்போதும் தயாரா இருக்கேன். அதுக்கான அட்வான்ஸ் தான் இது. நீயே இந்த செக்கை பில் பண்ணிக்க!" எனச் சொல்ல, அன்பழகனுக்கு கண்கலங்கி விட்டது.
ஒரு புதுமுக இயக்குனரை கைதூக்கிவிடும் நல்லெண்ணத்தில் சசிகுமாரை போலவே சமுத்திரகனியும் கைகோர்த்து செயல்படுவது மனமார பாராட்டத்தக்கது. கலக்குங்க சகோ......!

Post a Comment