ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்க இருப்பதாக கோடம்பாக்கம் முழுக்க அலையடித்துக் கிடக்கிறது. ஏற்கனவே பாலா இயக்கிய 'பரதேசி' படத்திலும் சீனிவாசன் நடிக்க இருப்பதாகப் பரபரப்பு கிளம்பி, கடைசி நேரத்தில் பவர் ஸ்டாரை பாலா விரட்டி அடித்த கூத்து நடந்தது. இப்போதும் அதுவே நிகழ்ந்திருக்கிறது. ''ஷங்கர் என்னை வற்புறுத்தி அழைச்சிருக்கார். அவருக்காக என்னோட மற்ற ஷூட்டிங்குகளை எல்லாம் நிறுத்திட்டு நடிக்க சம்மதம் சொல்லி இருக்கேன்'' என அத்தனை மீடியாக்களையும் அழைத்துவைத்துக் கூவிக் கொண்டிருந்தார் பவர். ஆனால், ஐ பட ஷூட்டிங்கில் என்ன நடந்ததோ... திடீரென பவர் ஸ்டாரை ஐ படத்திலிருந்து நீக்கி இருக்கிறார் ஷங்கர்.
''பவர் ஸ்டாரை நடிக்க வைப்பதாக இருந்தது உண்மைதான். ஆனால், பவர் ஸ்டார் சம்மந்தமான காட்சிகள் தேவையில்லை என தெரியவர அதுபற்றி அவரிடம் சொல்லப்பட்டுவிட்டது. அவரும் அடுத்த படத்தில் வாய்ப்புக் கொடுங்கள்... அதுவே போதும் எனச் சொல்லிவிட்டார்!" என்கிறார்கள் ஐ யூனிட்டில் உள்ளவர்கள்.
பவர் ஸ்டார் என்றாலே பரபரப்புதானா...?!

Post a Comment