''நடிகர் சசிகுமாரும் இயக்குனர் சமுத்திரகனியும் பிரிந்து விட்டார்கள். சசிகுமார் நடிக்கும் சுந்தரபாண்டியன் படமும் சமுத்திரகனி நடிக்கும் சாட்டை படமும் ஒரே வாரத்தில் வெளியாக இருக்கிறது. இதனால் சசிக்கும் கனிக்கும் இடையே நேரடி மோதல் நிகழ இருக்கிறது" என பரபரப்பான அனுமானங்கள் இறக்கைக் கட்டிப் பறக்கின்றன. ஆனால், உண்மையில் நடப்பதே வேறு. வரும் 14 -ம் தேதியன்று சுந்தரபாண்டியன் படம் ரிலீசாக இருக்கிறது. அந்தப் படத்துடனேயே சமுத்திரகனி நடிக்கும் சாட்டை படத்தின் ட்ரெய்லர் காட்சிகளும் இணைந்து வெளியாக இருக்கின்றன. சசிகுமாருக்கும் சமுத்திரகனிக்கும் மோதல் என கிளப்பவிட்டவர்கள் இந்தக் கூட்டணி உடன்பாடு கண்டு விக்கித்துப் போயிருக்கிறார்கள். 14 -ம் தேதி சசியின் சுந்தரபாண்டியன் வெளியாக இருக்கும் நிலையில், 21 -ம் தேதி சமுத்திரக்கனியின் சாட்டை படம் ரிலீசாக இருக்கிறது. சாட்டை படத்தை பிரமோட் செய்யும் விதமாக சுந்தரபாண்டியன் படத்துடன் சாட்டை படத்தின் டிரைலரையும் இணைத்து வெளியிடுவது சினிமா வட்டாரத்தில் நட்புக்கு இலக்கணமாக அமைந்திருக்கிறது. நட்புன்னா இப்படித்தான் இருக்கணும்!

Post a Comment