விஸ்வரூபம் எடுத்திருக்கும் குவாரி விவகாரம் அழகிரி மகனான துரை தயாநிதியை இப்போது மையம் கொண்டிருக்கிறது. துரை தயாநிதி நடத்திய ஒலிம்பஸ் கிரானைட்ஸ் நிறுவனம் தற்போது அதிகாரிகளின் விசாரணை வளையத்துக்குள் வந்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் நிர்வாகத்துக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என மறுத்திருக்கும் தயாநிதி தரப்பு, சட்ட ரீதியான முன்னெடுப்புகளில் தற்போது தீவிரமாக இருக்கிறது. அதிகாரிகளின் தீவிர விசாரிப்புகள் தொடர்வதால் தற்போது தலைமறைவாக இருக்கும் துரை தயாநிதி தன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான க்ளவ்ட் நைன் நிறுவனத்தையும் தற்போதைக்கு வேறு ஆட்களுக்கு கைமாற்றிவிட தீவிரமாக இருக்கிறாராம். இந்த நிறுவனத்தின் பங்குதாராராக இருந்த அழகிரியின் இளைய மருமகன் விவேக் தற்போது வெளிநாட்டில் தங்கிவிட்டதால் அவராலும் நிறுவனத்தை நடத்த முடியவில்லையாம். துரை தயாநிதியை பலரும் தீவிர அரசியலுக்கு வரச் சொல்லி வற்புறுத்திய போதும், சினிமா மீதே அவருடைய கவனமும் காதலும் இருந்தது. ஆனால், அத்தகைய சினிமா நிறுவனத்தையே கைவிட வேண்டிய சூழலுக்கு அவர் இப்போது ஆளாகி இருக்கிறார்.
காலத்தின் கோலம் என்பது இதுதானா?

Post a Comment