வெற்றியோ தோல்வியோ... அதைப்பற்றி சட்டையே செய்யாமல் தன் அடுத்தபட வேளைகளில் இறங்கிவிடுவது தல அஜித்தின் வழக்கம். பில்லா பார்ட் டூ படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகாததால் ரசிகர்களைத் திருப்திபடுத்தும் விதமாக பிரபல இயக்குனர்களை வைத்து அடுத்த படத்தைக் கொடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார் அஜித். வெற்றிமாறன் தொடங்கி கே.எஸ்.ரவிக்குமார் வரை பலரிடமும் கதை குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. சராசரி வாலிபன் ஒருவன் தன் வாழ்வில் எத்தகைய ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாகி வெற்றி பெறுகிறான் என்கிற ஒன்லைன் மூலமாக திரைக்கதை உருவாக்கப்பட்டு வருகிறது.
'பீனிக்ஸ்' என்கிற தலைப்பு அஜித்தின் அடுத்தப் படத்துக்கு பொருந்துகிறதோ இல்லையோ... அஜித்தின் வாழ்க்கைக்கு நிச்சயம் பொருந்தும். மிகுந்த எதிபார்ப்புடன் வெளியான அஜித் படங்கள் பலவும் ஒரு வாரத்துக்குள்ளேயே ஊற்றிக்கொண்ட நிகழ்வுகள் எல்லாம் நடந்திருக்கின்றன. ஆனால், எத்தனை தோல்விப் படங்களை கொடுத்தாலும், அஜித் படத்துக்கான வர்த்தகமோ வரவேற்போ கொஞ்சமும் குறைந்தது இல்லை. எத்தனை தோல்விகள் வந்தாலும் அதனைக் கடந்து சில நாட்களியே சிலிர்த்துக் கிளம்பும் நிஜ பீனிக்ஸ் பறவைதான் அஜித்!

+ comments + 1 comments
Sema title thala
Post a Comment