ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாகத் தயாராகி வரும் 'ஐ' பட ஷூட்டிங் பெரம்பூரில் ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது. ஐ பட யூனிட் சீனாவுக்கு கிளம்பிப் போய் விட்டதாகவும், அங்கேயே ஷூட்டிங் நடப்பதாகவும் பரபரப்பு நிலவிய நிலையில், சென்னைக்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் 15 நாட்களாக ஷங்கர் ஷூட்டிங் நடத்துவது சினிமா புள்ளிகளையே வியக்க வைத்திருக்கிறது. 17.8.2012 அன்று மட்டும் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. காரணம், அன்று ஷங்கருக்கு பிறந்த நாள். அடுத்த நாளே மறுபடியும் பழைய வேகத்தில் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. முதன்முறையாக சங்கருடன் கைகோர்த்திருக்கும் எழுத்தாளர்கள் சுபா, 'இந்தப் படத்தை நூறு நாட்களுக்குள் ஷங்கர் முடித்து விடுவார்' என பலரிடமும் உறுதியாக சொல்லி வருகிறார்கள்.
இதற்கிடையில் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலுவின் இம்சை மன்னன் 23 ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தையும் சீக்கிரமே எடுக்க இருக்கிறார்கள். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார் ஷங்கர்.

Post a Comment