புனித உம்ரா பயணமாக மெக்கா போயிருக்கிறார் இயக்குனர் அமீர். ரம்ஜான் தினத்தை மெக்காவில் கொண்டாட இருக்கும் அமீர் இந்த மாதம் 22 -ம் தேதி சென்னை திரும்ப இருக்கிறார். மூன்று வருடங்களாக அவர் எடுத்து வரும் ஆதிபகவன் படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிந்திருக்கும் நிலையில் மெக்கா பயணத்தை முடித்து திரும்பிய பிறகு எடிட்டிங் வேலைகளைத் தொடங்க இருக்கிறார் அமீர். நீண்ட தாடியை வளர்த்திருக்கும் அமீர் ஆதிபகவன் படத்தில் வில்லன் வேடத்தில் சில காட்சிகளில் முகத்தைக் காட்டி இருக்கிறாராம்.
மெக்கா பயணத்தை முடித்து ரியாத் திரும்பும் அமீர் அங்கிருக்கும் சிலரிடம் தனது அடுத்த படமான 'ஜிகாத்' படத்துக்கான ஆலோசனையையும் முடித்துவிட்டு வருகிறார். சென்னைக்குத் திரும்பியவுடன் கரு.பழனியப்பனின் படத்தில் நடிக்க இருக்கும் அமீர், அதன் பிறகு தனது ஜிகாத் படத்தைத் துவங்க இருக்கிறார்!
-கும்பல்

+ comments + 1 comments
Ameerukku santhiyum samathanamum uruvagattum.....
Post a Comment