Latest Movie :

கருணாநிதிக்கு கொளத்தூர் மணி வேண்டுகோள்!



டெசோ நடத்தும் மாநாடு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. மத்தியில் ஆளும்கட்சியின் ஒரு அங்கமாக உள்ள தி.மு.க முன் முயற்சி எடுத்தும் இந்த மாநாடு குறித்து-ஈழத்தில் வாழும் தமிழர்களும் – புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் கவலையுடனும்,எதிர்பார்ப்புடனும் இந்த மாநாட்டு முடிவுகளுக்குக் காத்திருக்கிறார்கள். தமிழ் ஈழ ஆதரவுஅமைப்பு நடத்தும் மாநாட்டில் தமிழ் ஈழம் குறித்து தீர்மானங்கள் எதுவும் வராது என்று தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்ட கருத்து – தமிழர்களுக்கு முதல் அதிர்ச்சி! தமிழ் ஈழம் குறித்த தீர்மானம் வரவில்லை என்றாலும் – குறைந்தது கீழ்க்கண்ட முடிவுகளையாவது வலியுறுத்த வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

1. ஈழத்தமிழர்கள் – ஒரு தனித் தேசிய இனம்
2. அவர்களுக்குத் தங்கள் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொள்ளும் சுயநிர்ணயஉரிமை கோர உரிமை உண்டு.
3.2009 இறுதிப் போரில் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே.
4. எனவே இனப்படுகொலைகள் நடந்த நாட்டில் ஐ.நா சபையே முன்முயற்சி எடுத்துவாக்கெடுப்பு நடத்தியதைப் போல் ஈழத்தமிழர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு நடத்தும் மாநாட்டில் தமிழீழம் பற்றிய தீர்மானம் இல்லைஎன்றாலும், வெறுமனே ஒரு பெரிய மாநாடு கூடிக்கலைவதாக அமைந்து விடாமல்ஈழத்தமிழர்களுக்கு ஏதேனும் பயன்சேர்க்க வேண்டுமானால் இந்தக் கோரிக்கைகளையாவது தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இதெல்லாம் கருணாநிதிக்கு கேட்கப் போகிறதா என்ன?
Share this article :

+ comments + 1 comments

ம்... பார்க்கலாம்... என்னதான் நடக்கிறது என்று...

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger