Latest Movie :

கருணாநிதி அப்பல்லோ அட்மிட்..!



இதுவரை வெளிவராத 'பிற்போக்கு' பின்னணி!

டந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதி திடீரென அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அட்மிட்டானார் அல்லவா... 'திடீர் வயிற்றுப்போக்கு...' என கட்சித் தரப்பில் அதற்கு விளக்கம் சொல்லப்பட்டது. வயிற்றுப்போக்கு வந்தது உண்மைதான். அது ஏன் வந்தது என்கிற பிற்போக்கு பின்னணி தெரியுமா?  



கருணாநிதி அறிவாலயத்துக்கு வரும் போதெல்லாம் சரவணபவனில் இருந்து மசாலா போண்டா வரவழைத்து சுடச்சுட  சுவைப்பார். கருணாநிதிக்கு என்றே ஸ்பெசலாக தயார் செய்வார்கள் சரவணபவனில். சிலநாட்களுக்கு முன் திடீரென அறிவாலயம் வந்த கருணாநிதிக்கு மசாலா போண்டா சாப்பிடனும் போல ஆசை. உடனே தன் உதவியாளரை  அழைத்து மசாலா போண்டா வாங்கிவர அனுப்பி இருக்கிறார். கருணாநிதி சமீப காலமாக அறிவாலயம் பக்கம் வராததால் சரவணபவனில் மசாலா போண்டா செய்வதில்லையாம். அதனால், உதவியாளர்  வெறும் கையோடு திரும்பி இருக்கிறார். ''பதவியில இல்லாட்டி போண்டா கூட கிடைக்காதா...'' என்று நொந்துகொண்ட கருணாநிதி, "என்ன பண்ணுவீங்களோ தெரியாது... எனக்கு மசால் போண்டா திங்கணும்போல இருக்கு. பிளாட்பாம் கடையில இருந்தகூட பரவாயில்லை... உடனே எனக்கு வாங்கிட்டு வாங்க..." என்று ஆவேசமாக சத்தம் போட்டிருக்கிறார். 

மவுண்ட் ரோடு முழுக்க அலைந்து திரிந்தவர் கடைசியில் ஒரு தள்ளுவண்டிக் கடையில் மசால் போண்டாவை வாங்கி வந்திருக்கிறார். எதோ வெற்றிக் கனியையே பறித்துவிட்ட சந்தோசத்தில் மசாலா போண்டாவை ரசித்து ருசித்து சாப்பிட்டிருக்கிறார் கருணாநிதி. 'வரட்டா...' என்றபடி குஷியாக கிளம்பிய கருணாநிதிக்கு வரத்தோ வரத்து என பின் பக்கம் பீய்ச்சி அடித்திருக்கிறது. 'இன்னும் ரெண்டு தடவை போனா பாடி தாங்காதுடா சாமி...' எனப் பதறியவர்கள் உடனே அப்பல்லோவில் அட்மிட் செய்திருக்கிறார்கள். ட்ரிப்ஸ் ஏற்றப்பட, 'பட்ட' களைப்பில் தலைவர் அப்படியே உறங்கிவிட்டார். 

விஷயம் தெரிந்து ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, வேலு என 'முன்னாள்கள்' எல்லோரும் பதறி அடித்து ஓடி வந்திருக்கிறார்கள். 'பிற்போக்கு' பின்னணி தெரிந்து சற்றே பெருமூச்சு விட்டவர்கள் மிட்நைட் ஒரு மணிவரை தலைவரின் தலைமாட்டிலேயே அமர்ந்துவிட்டு காலை வருவதாகச் சொல்லி கிளம்பி இருக்கிறார்கள். 

அதிகாலை ஐந்து மணி... தலைவருக்கு விழிப்பு வந்து விட்டது. கண்களை சுருக்கி எழுந்தவர், 'நான் எங்கே இருக்கேன்... இங்கே எப்படி வந்தேன்?' என பதறியிருக்கிறார். ஓடோடி வந்த உதவியாளர் ஸ்டாலின் உள்ளிட்ட முன்னாள்கள் மிட் நைட் வரை காத்திருந்துவிட்டு கிளம்பி போனதை சொல்லி இருக்கிறார்.  

''ஆறு மணிக்கு டாக்டர் செக்கப்புக்கு வருவார்'' என உதவியாளர் சொல்ல, ''செக்கப்பும் வேணாம்... ஒரு மண்ணும் வேணாம்... 
விடியிறதுக்குள்ள வீட்டுக்கு போயிடனும்... பத்திரிக்கைகாரனுங்க யாராவது பார்த்தா 'கருணாநிதி ஆபத்தான நிலையில் அப்போல்லோவில் அட்மிட்'ன்னு  செய்தி போட்ருவானுக..." எனச் சொல்லி உடனே கார் ஏறி கிளம்பிவிட்டாராம். இது தெரியாமல் ஏழு மணி வாக்கில் அப்பல்லோ சென்ற ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் கலைஞரை காணாது பதற, அவர் வீடு போய்ச் சேர்ந்தது அதன் பின்னரே தெரிந்திருக்கிறது. 

'பின்' குறிப்பு:-  தள்ளாத வயதிலும் பத்திரிக்கையாளர்கள் விசயத்தில் தலைவர் எந்தளவுக்கு எச்சரிக்கையாக இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்துவதற்காக மட்டுமே இந்த கட்டுரை வெளியிடப்படுகிறதே தவிர, வேறெந்த உள்நோக்கமும் வெளி நோக்கமும் நமக்குக் கிடையாது!

                                                                                                         - எம்.ஆர்.ராதா
Share this article :

+ comments + 3 comments

Anonymous
5 August 2012 at 20:03

karumamta saaaaaaamy....

5 August 2012 at 22:40

கீழே போனதால மேல போயிட்டான்னு அசிங்கமா பேசுவானுங்களே... - வடிவேலு டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது...........

Anonymous
6 August 2012 at 05:01

seththu poi irruka vaendiyathuthaana..... ivanellam intha naatula irunthu enna payan..... kodaana kodi tamizhargalai kondru kuviththathuthaan mitcham.... teso vaa teso..... seththu tholada tharuthala

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger