''அன்னதானமே என்னைக் காப்பாற்றும்!''
சர்ச்சைகள், சங்கடங்கள் என நித்தியைச் சுற்றும் பிரச்சனைகள் ஏராளம். ஆர்த்தி ராவ் அளித்திருக்கும் அதிரடியான சாட்சியமும் அமெரிக்க அரசின் வேகமும் நித்தியின் கையில் விலங்கு மாட்டாமல் விடாது போலிருக்கிறது. இதற்கிடையில் கர்நாடக அரசும் நித்தி மீதான அத்தனை வழக்குகளையும் தூசு தட்டி எடுக்க, எங்கே சென்றாலும் நிம்மதி இல்லை என்கிற நிலையாகிவிட்டது நித்திக்கு.
இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நெருக்கமான சீடர்கள் மத்தியில் நித்தி உற்சாகமாகவே வலம் வருகிறார். சீடர்கள் மத்தியில் அவர் அள்ளிவிடும் அருளுரையை நீங்களும் கேளுங்களேன்...
''இந்த இக்கட்டுகள் எல்லாம் என்னை பக்குவப்படுத்துவதற்காக இறைவனே ஏற்படுத்திக் கொடுப்பவை. பகவத் கீதையில் 'உன்னால் தாங்கக்கூடிய துன்பங்களையே நான் கொடுக்கிறேன்' என்கிற வரியை நீங்கள் படிக்க வேண்டும். அதிக துன்பங்களை தாங்கக்கூடிய வல்லமை எனக்கு இருக்கிறது. இன்னும் எத்தனை சோதனைகள் வந்தாலும் நான் தாங்கிக் கொள்வேன். நடைவண்டி பழகும் குழந்தை தன் அருகே தாய் நிற்கிறாள் என்கிற தைரியத்தில்தான் நன்றாக நடை பழகும். என் அருகே இறைவன் நிற்கிறான். அதனால்தான் இத்தனை சோதனைகளையும் நான் எளிதாகக் கடக்கிறேன். மதுரை ஆதீன மடத்தில் இப்போது ஒரு நாளைக்கு 2000 பேர் அன்னதானம் பெறுகிறார்கள். இதெல்லாம் எப்படி சாத்தியமானது? மதுரையில் உள்ளவர்களின் பசி இந்த எளியவனாலேயே தீர்க்கப்பட வேண்டும் என்பதே விதி. எனக்கான கஷ்டங்களைக் கொடுக்கும் இறைவன், அதிலிருந்து என்னை மீட்கும் வரமாக அன்னதானம் வழங்கும் பாக்கியத்தை எனக்கு வழங்கி இருக்கிறான். வயிறார உண்டு மனசார என்னை வாழ்த்தும் இதயங்கள் இப்போது அதிகம். குளிர்ந்த வயிற்றின் குரல்களே என்னை எல்லாவித துன்பங்களில் இருந்தும் காப்பாற்றும். இந்த சிரமங்கள் எல்லாம் இன்னும் இரண்டு மாதங்களுக்குத்தான். பரிபூரண திருவருளை விரைவிலேயே நான் அடைவேன். அப்போது உலகமே என்னை தரிசிக்கும்!"
யப்பா சாமிகளா... உங்களை இன்னுமாடா இந்த உலகம் நம்புது..? நாலு புத்தகங்களில் உள்ள விசயங்களை படிச்சிட்டு நீங்க என்ன அள்ளிவிட்டாலும் அசந்துபோற இந்த சிஷ்யப் பிறப்புகளை எத்தனை பெரியார்கள் பிறந்து வந்தாலும் திருத்த முடியாது!
- கும்பல்

.jpg)
Post a Comment