இதனால் கோடம்பாக்க ரசிகப் பெருமக்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால்... தமிழ் திரையுலகின் அசாத்திய சக்திகளாக இருக்கும் இயக்குனர் பாலாவும் கவிப்பேரரசு வைரமுத்துவும் முதன் முறையாக கூட்டணி அமைக்க இருக்கிறார்கள். பரதேசி படத்தை வெற்றிகரமாக 90 நாட்களுக்குள் எடுத்து முடித்த இயக்குனர் பாலா அடுத்த அதிரடியையும் இந்தப் படத்தில் நிகழ்த்த இருக்கிறார். இதுகாலம் வரை பாலாவின் எந்தப் படத்துக்கும் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியது இல்லை. அந்தக் குறையை இந்தப் படத்தில் நிறைவுக்குக் கொண்டு வந்திருக்கிறார் பாலா. முதலில் நா.முத்துக்குமாரை அணுகினார் பாலா. ஆனால், அவர் சொன்ன சூழலுக்கும் முத்துக்குமாரின் வரிகளுக்கும் ஒத்துப்போகவில்லை.
இதற்கிடையில் ஒரே ஊர்க்காரர்களாக இருந்தும் பாலா - வைரமுத்து இருவரும் இணையாயது குறித்து வருத்தப்பட்ட சிலர் பாலாவிடம் பேசியிருக்கிறார்கள். அடுத்தகணமே பாலா - வைரமுத்து சந்திப்பு நடந்திருக்கிறது. இத்தனை காலம் இளையராஜாவின் இசையில் படம் செய்ததாலேயே வைரமுத்து பாடல்களை பாலாவால் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. இதுகுறித்து மனம்விட்டுப் பேசிய இருவரும் மகிழ்வோடு கைகுலுக்கி களம் இறங்கி இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையில் வைரமுத்து - பாலா கூட்டணி பட்டையை கிளப்ப இருக்கிறது. குளிர்ந்த காதுகளோடும், குதூகல இயத்தோடும் காத்திருங்கள் ரசிகர்களே...!

+ comments + 2 comments
Super kottani.kalakkunga bala sir...
Spr
Post a Comment