சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியில் படித்த ரஞ்சன் என்கிற மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரைவிட்ட சம்பவம் ஒட்டுமொத்த பெற்றோர்களையும் உறைய வைத்திருக்கிறது. 'மாசிலாமணி', 'வேலூர் மாவட்டம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மனோகரின் மகன்தான் ரஞ்சன். பள்ளியில் நீச்சல் பயிற்சிக்காக குளத்தில் குதித்த ரஞ்சன் யாரும் கவனிக்காத நிலையில் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக இறந்திருக்கிறான்.
புதுப் படம் ஒன்றுக்காக ஷூட்டிங்கில் இருந்த மனோகருக்கு குழந்தை இறந்த தகவல் சொல்லப்பட்ட, அவர் பதறியபடி ஓடி வந்திருக்கிறார். விஷயமறிந்து திரைத்துறை வட்டாரத்தினர் பலரும் மனோகருக்கு ஆறுதல் சொல்ல அவர் வீட்டில் குவிந்தனர். 'வேலூர் மாவட்டம்' படத்தில் நடித்த நடிகர் நந்தா மனோகருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளற்று விக்கித்துப் போய் நின்றார். மகனை இழந்த துக்கத்தில் கண்கலங்கிய மனோகர், ''பையன் நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்கணும்னு நெனச்சேன். நீச்சல் பயிற்சின்னு சொல்லி இப்படி பாதியிலேயே பறிச்சிட்டாங்களே..." எனக் கதறியது பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியது. சம்பவத்துக்கு காரணமான ஐந்து நபர்களை முதற்கட்ட நடவடிக்கையாக போலீஸ் கைது செய்திருக்கிறது.


+ comments + 2 comments
பள்ளிக்கூடங்கள் அனைத்தும் இப்படி பலிகூடங்களானால் யார் தான் நிம்மதியாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியும்? டிவியில் பார்த்த போதே இயக்குநர் மனோகரின் மகன் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்தப் பையனின் ஆன்மா சாந்தி பெற உதவி இயக்குநர்களின் சார்பாக நான் பிரார்த்திக்கிறேன்.
Varunthukiren...
Post a Comment