'கொலைவெறி' பாடல் புகழ் அனிரூத் இப்போது காதல் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். நடிகை ஆண்ட்ரியாவும் அனிரூத்தும் மிக அன்யோன்மாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரக்கின்றன. ''இது இரண்டு வருடங்களுக்கு முன்னர் எடுத்த படம். அப்போது அனிரூத் சின்ன பையன். அதனால், அந்தக் காட்சியை நாங்கள் விரசமாக நினைக்கவில்லை" என தன்னிலை விளக்கம் கொடுத்து இருக்கிறார் ஆண்ட்ரியா. ஆனால், ரஜினிகாந்த் மனைவியான லதாவின் தம்பி மகன் அனிரூத் இந்த புகைப்பட சர்ச்சைக்கு இதுநாள்வரை விளக்கம் கொடுக்காமல் இருந்தார். சமீபத்தில் தன் நண்பர்கள் சிலரிடம் மனம் விட்டுப் பேசிய அனுரூத், ஆண்ட்ரியா குறித்த பல செய்திகளை மனம்விட்டுக் குமுறியிருக்கிறார். ''நானும் ஆண்ட்ரியாவும் மனதார காதலித்தது உண்மை. எனக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ஒன்பது வயது வித்தியாசம். என்னைவிட பெரியவளான ஆண்ட்ரியாவை நான் உண்மையாக மனம் செய்ய விரும்பினேன். ஆண்ட்ரியாவின் குடும்பத்தினரிடமும் இதுபற்றி பேசி இருக்கிறோம். ஆனால், கடந்த சில வருடங்களில் ஆண்ட்ரியாவின் சகவாசங்கள் வேறுமாதிரி ஆகிவிட்டன. ஒருகட்டம் வரை கண்டித்துப் பார்த்தேன். 'நான் பெரிய நடிகையாகிவிட்டேன்... இனிமேல் அப்படித்தான் இருப்பேன்' எனச் சொல்லி ஒதுங்கிவிட்டார் ஆண்ட்ரியா. நானும் அதன் பிறகு ஒதுங்கிவிட்டேன். கொலைவெறி பாடல் ஹிட்டான பிறகு மறுபடியும் என்னோடு பேசினார் ஆண்ட்ரியா. ஆனால், நான் ஆண்ட்ரியாவை கண்டுகொள்ளவே இல்லை. அதற்குப் பழிவாங்கும் விதமாகத்தான் பல வருடங்களுக்கு முன்னால் எடுத்த புகைப்படங்களை இப்போது வெளியிட்டிருக்கிறார்கள்!" என ஆதி முதல் அந்தம் வரை சொல்லி புலம்பி இருக்கிறார் அனிரூத்.
பெரிய இடத்துப் பையனின் புலம்பல் அவருடைய நண்பர்கள் வழியாக நம் காதுக்கும் வந்தது. அதன் பதிவே இது!
நல்லா இருந்தா கண்ணுக்கு அழகு!


Post a Comment