Latest Movie :

சீமானுக்கு கல்யாணம்... முதல் முறையாய் அறிவிக்கிறது கும்பல்



நாற்பது வயது கடந்தும் திருமண வாழ்வில் விருப்பமின்றி தமிழ் ஈழ முன்னெடுப்புகளில் தீவிரமாக இயங்கிவரும் நாம் தமிழர் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சீக்கிரமே கால் கட்டு! எதிர்வரும் அக்டோபர் முதல் தேதி சீமானுக்கு திருமணம் நடக்க இருக்கிறது என்பதை கும்பல் பெருமையுடன் தெரிவிக்கிறது. 


தமிழகத்தை சேர்ந்த பிரபலமான பெண்மணி ஒருவர்தான் சீமானை மணக்க இருக்கும் அதிர்ஷ்ட சாலி. விடுதலை புலிகளின் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள் மதிவதனியை மணந்த தினம் அக்டோபர் ஒன்று. அதனால், அன்றைய தினத்தையே தனது திருமண நாளாக திட்டமிட்டிருக்கும் சீமான், வெகு விமர்சையாக திருமணத்தை நடத்த இருக்கிறார், இருபத்தி ஐயாயிரம் பேருக்கு கறி விருந்தும், மூவாயிரம் பேருக்கு சைவ விருந்தும் இப்போதே ஏற்பாடாகி  வருகிறது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி மான் தலைமையில் நடக்க இருக்கும் திருமணத்தில் வைகோ, திருமாவளவன், கனிமொழி, கிருஷ்ணசாமி, கொளத்தூர் மணி, வேல்முருகன்,தமிழருவி மணியன் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சிறப்பு விருந்தினராக ஜெகன் மோகன் ரெட்டி  கலந்து கொள்ள இருக்கிறார். 

சீமான் மீது செக்ஸ் டார்ச்சர் புகார் கொடுத்து பரபரப்பு கிளப்பிய சினிமா நடிகை விஜயலட்சுமி தான் கொடுத்த புகாரை விரைவில் வாபஸ் வாங்க இருக்கிறார். இதற்கான பேச்சு வார்த்தையில் வழக்கறிஞர் தடா சந்திரசேகரன், மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் உள்ளிடோர் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.


திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே சீமானுக்கு இல்லாமலே போயிருந்தது. ஆனாலும், சீமானின் அதீத வளர்ச்சியை முடக்கும் வகையில் பெண்கள் சம்மந்தபட்ட சர்ச்சைகளை போலிஸ் தரப்பும் பொறமை கொண்ட அரசியல் தரப்பும் தொடர்ந்து கிளப்பி வந்தது. விஜயலக்ஷ்மியின் விவகாரமும் அப்படிபட்ட ஒன்றுதான். விஜயயலக்ஷ்மி பரபரப்பு கிளப்பிய பின்னணியில் சீமானுக்கு மிக நெருக்கமான இயக்குனர்கள் சேரன், தங்கர் பச்சான் இருவரும் தீவிரமாக செயல்பட்டது சீமானை மனரீதியாக மிகவும் நொறுங்க வைத்துவிட்டது. பெண்கள் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாகவும், மன நிம்மதிக்கான வழியாகவும் திருமண முடிவை எடுத்திருக்கிறார் சீமான். 

சீமானின் இல்லற வாழ்வு சிறக்க இனிதே வாழ்த்துகிறது கும்பல். ஈழ தமிழர் முன்னெடுப்புகளிலும், மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களிலும் தீவிரம் காட்டும் சீமானுக்கு திருமண வாழ்கையும் பெரிய அளவில் கை கொடுக்கட்டும்! 

- கும்பல் 
Share this article :

+ comments + 8 comments

வாழ்த்துக்கள் சீமான் அண்ணா... நீங்கள் பல்லாண்டு வாழ உலகத் தமிழர்களின் சார்பாக உளமாற வாழ்த்துகிறோம். ஈழ ஆதரவுத் தலைவர்களிலேயே இன்றைக்கு எல்லோருடைய ஆதரவையும் பெற்றிருக்கும் ஒரே நபர் நீங்கள் தான். வாழிய பல்லாண்டு!

3 July 2012 at 19:56

அண்ணனுக்கும் அண்ணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். திருமண செய்தியை முதன்முறையாக வெளியிட்டு ஆச்சரியப்படுத்தும் கும்பல் இணையதளமே... அண்ணன் கரம்பிடிக்க இருக்கும் அண்ணி யார் என்பதை சீக்கிரமே சொல்லுங்கள். அவருடைய புகைப்படத்தையும் சீக்கிரமே வெளியிடுங்கள்!

Anonymous
4 July 2012 at 03:05

என்னது இருபத்தைய்யாயிரம் பேருக்கு கறி விருந்தா? கலக்குங்க சீமான் அண்ணா... கலக்குங்க...
விஜயலெட்சுமி மாதிரியான சர்ச்சைகளுக்கு சீமானின் திருமணம் நிச்சயம் முற்றுப்புள்ளியாக அமையும்!

4 July 2012 at 03:07

வாழ்த்துகள் சீமான்.

5 July 2012 at 10:34

அண்ணா...!!! அண்ணி, தமிழ் உணர்வு கொண்டவளா என்று
நன்றாக தெரிந்து கொள் ...பின்னாளில் எங்களை அன்பின்
அடிமை ஆக்கி விடாதே .....

10 July 2012 at 22:24

vazhthukal anna annikku...

அப்படியா செய்தி!
ம்.. வாழ்த்துக்கள்.
சீமான் அவர்களுக்கு.

Anonymous
17 July 2012 at 09:41

eru naattu uravugalum thoipada vaalthukiren

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger