Latest Movie :

வருங்கால ஜனாதிபதியை வறுத்தெடுக்கிறார் வைகோ!



னாதிபதி தேர்தலில் ஒரு எம்.பி. ஓட்டை வைத்திருக்கும் ம.தி.மு.க. தங்களின் ஆதரவு பிரணாப் முகர்ஜிக்கு இல்லை என அறிவித்து உள்ளது. 


இதுபற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வைகோ, "ஆயுதங்களை வழங்கி, ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரை நடத்தியதே இந்தியா தான் என்று ராஜபக்சேவே சொல்கிறார். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இதை மத்திய அரசு கண்டித்தது கூட கிடையாது. இலங்கையில் பலாலி விமானதளத்தை புதுப்பிக்க இந்திய ராணுவம் உதவியபோது,ராணுவ மந்திரியாக இருந்த பிரணாப் முகர்ஜியை சந்தித்து அதை தடுக்க முயற்சித்தேன். அப்போது இலங்கை நட்பு நாடு என்று சொன்னார். அதன் பின்னர் விமானத்தளம் புதுப்பிக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் செஞ்சோலை பகுதி தாக்கப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் எனும் மாபெரும் ஊழலுக்கு காரணமான, ஈழத்தமிழர் படுகொலைக்கு உதவிய காங்கிரஸ் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ம.தி.மு.க. ஆதரிக்காது" என்றார் ஆவேசமாக.

நாடாளுமன்றத்தில் வைகோவின் பேச்சை பலமுறை பாராட்டியவர் பிரணாப். ஆனாலும் ஈழத்துரோகத்துக்கு பதிலடியாக வைகோ சீறி இருப்பது பிரணாப் முகர்ஜியை நிச்சயம் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கும்.
Share this article :

+ comments + 1 comments

Anonymous
2 July 2012 at 03:48

Vaigo congrats

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger