Latest Movie :

கருணாநிதிக்கு செக் வைக்கும் சீமான்!



குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் முன்மொழியப்பட்டுள்ள வேட்பாளரான பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவது நிச்சயமாகிவிட்ட நிலையில், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு இதற்கு மேலாவது பிரணாப் முகர்ஜி மதிப்பளிப்பாரா என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 
 
''குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து தொடங்கிய பிரணாப் முகர்ஜிக்கு, காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க.வே முதன் முதலில் ஆதரவு தெரிவித்தது. இப்போது தமிழ்நாட்டின் சட்டமன்றக் கட்சிகளில் பலவும் பிரணாப் முகர்ஜிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்ற பின், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு பிரணாப் முகர்ஜி மதிப்பளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுவது இயற்கையானதே. ஈழத்தில் தமிழினத்தை அழித்தொழித்த இனப் படுகொலைப் போரின் சூத்ரதாரியாக செயல்பட்டது மட்டுமின்றி, அந்தப் போரையும், இனவெறி ராஜபக்ச அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் நியாயப்படுத்தி பேசியவர் பிரணாப் முகர்ஜி. அயலுறவு அமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தபோதுதான் கச்சத் தீவு கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீது பல முறை சிங்கள கடற்படை தாக்குதல் நடத்தியது, அதில் பல மீனவர்கள் கொல்லப்பட்டனர். தமிழினத்தின் உரிமைகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத பிரணாப் முகர்ஜிக்குத்தான், தாங்களே தமிழினத்திற்கு அரணாக இருப்பவர்கள் என்று கூறிக்கொள்ளும் தி.மு.க. முதலில் முன்வந்த ஆதரவு அளித்துள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான தே.மு.தி.க., புதிய தமிழகம், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம், சமத்துவ மக்கள் கட்சி ஆகியனவும் பிரணாப் முகர்ஜிக்கு வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ளன.
 

பிரணாப் முகர்ஜிதான் இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் என்று உறுதியாகிவிட்ட நிலையில், அவரிடமிருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியும், அவருக்கு வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ள தமிழ்நாட்டின் மற்ற சட்டமன்றக் கட்சிகளும் ஒரு வாக்குறுதியைப் பெற வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் அநியாயமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 22 ஆண்டுகளாக சிறையில் வாடிவரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று தம்பிமார்களின் கருணை மனுவை ஏற்று அவர்களை மரண தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிரணாப் முகர்ஜியுடன் இருந்து ஒரு வாக்குறுதியை இக்கட்சிகள் பெற வேண்டும். இந்த மூன்று தம்பிகளின் கருணை மனுக்களை மறு பரிசீலனை செய்து, அவர்களின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியபோது, அதற்கு ஆதரவாக நின்ற இந்தக் கட்சிகள், இப்போது அதற்கான வாக்குறுதியை பெறுவதே சரியான அரசியல் அணுகுமுறையாக இருக்கும்.

இப்படியொரு வாக்குறுதியை பெற்றப் பிறகு பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்தால், அது தமிழர்களின் இன உணர்வை பிரதிபலிப்பதாக இருக்கும். தமிழின உரிமைப் போராட்டங்களும், தமிழரின் அரசியலும் வேறுபட்டதல்ல என்பதை டெல்லி தலைவர்களுக்கு உணர்த்துவதாகவும் இருக்கும்" இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார் சீமான்.

தான் முன்மொழிந்ததாலேயே முன்பு பிரதீபா பாட்டீல் ஜனாதிபதியானதாகவும், தற்போதும் அதேபோல் தான் முன்னின்று முழங்கியதாலேயே பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி ஆகப்போவதாகவும் பெருமிதம் பேசும் கருணாநிதி உண்மையாகவே தன்னால்தான் எல்லாம் நடப்பதாக இருந்தால், தூக்கின் நிழலில் அல்லாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் காப்பதற்கான நடவடிக்கையை கருணாநிதி எடுக்கலாமே... கருணாநிதியின் ஐம்பது வருட நண்பரான பிரணாப் தன் நண்பருக்காக மூன்று தமிழர்களின் கருணை மனுக்களை ஏற்று தண்டனைக் குறைப்பு செய்யலாமே... சீமானின் இந்த வலியுறுத்தல் கருணாநிதிக்கு சரியான செக்காக அமைந்திருக்கிறது!

Share this article :

+ comments + 4 comments

Anonymous
21 July 2012 at 02:41

சீமானை சமாளிக்க கருணாநிதி நிறைய கஷ்டப்படுவார் போலிருக்கிறதே...

21 July 2012 at 02:41

nalla karuththu kumbal

தலைவரு என்னதான் பண்றாருன்னு பொறுத்திருந்து பார்ப்போம்...

சீமான் வாழ்க... சீமான் மணக்கப்போகும் பெண்ணை பற்றி எழுதுவதாகச் சொல்லி இருந்தீர்களே... ஏன் இவ்வளவு தாமதம் ? சீக்கிரம் அண்ணியைப் பற்றி எழுதுங்கள்.

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger