தமிழகத்தின் எந்த மீடியாக்களும் இதுவரை வெளியிடாத தகவலை நம் கும்பல் வாசகர்களுக்கு அறியத் தருகிறோம். இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த போலீஸ் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியை இன்று (5.6.12) காலை கைது செய்திருக்கிறது போலீஸ். சில நிமிட விசாரணையிலேயே அவன்தான் கொலைகாரன் என்பது போலீஸுக்கு உறுதியாகி விட்டது.
ராமஜெயம் கொலை வழக்கை தற்போது விசாரித்து வருபவர் திருச்சி நகர கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் அமல்ராஜ். கடந்த வாரத்தில் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க இவர் புதிய தனிப்படைகளை அமைத்தார். அதற்கு தக்க பலன் கிடைத்திருக்கிறது. ராமஜெயத்துக்கு மிக நெருக்கமான ஒரு வாலிபர்தான் அவரைக் கொலை செய்திருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. 'தனிப்பட்ட வெளியே சொல்ல முடியாத சில காரணங்களுக்காக அவரைக் கொலை செய்தேன்' என அந்த வாலிபர் போலீஸிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
அந்த வாலிபர் பிடிபட்ட தகவல் உடனடியாக டி.ஜி.பி. ராமானுஜத்துக்கு தெரிவிக்கப்பட்டது. தகுந்த ஆதாரங்களை சேகரித்த பிறகே மீடியாக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அவர் கறாராக சொன்னதால், குற்றவாளி பிடிபட்ட செய்தியை அறிவிப்பதில் போலீஸ் சற்றே நிதானம் காட்டுகிறது.
ராமஜெயம் கொலை குறித்த அத்தனை பின்னணிகளையும் தொடர்ந்து நாம் எழுதி வந்தோம். ராமஜெயம் கொலைக்கு பெண் சம்பந்தப்பட்ட சகவாசமே காரணமாக இருக்கும் என்பதையும் தொடர்ந்து அனுமானமாக சொல்லி வந்தோம். குற்றவாளி அடையாளம் காணப்பட்டிருக்கும் செய்தியை முதல் ஆளாக நம் வாசகர்களுக்கு அறிவிப்பதில் கும்பல் இணையதளம் பெருமகிழ்வு கொள்கிறது!
விசாரணை வளையத்தை தக்கபடி இறுக்கி பொறுப்பேற்ற இரண்டு வாரங்களுக்குள்ளேயே குற்றவாளியைக் கண்டுபிடித்து தமிழக போலீஸின் பெருமையை மீட்டுக் கொடுத்திருக்கும் அமல்ராஜ் அவர்களை கும்பல் மனமார வாழ்த்துகிறது.
பி.கு: 'என்னை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டார்' என எம்.நடராஜன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது இதே அமல்ராஜுக்கு எதிராகத்தான்!
- கும்பல்



+ comments + 4 comments
கும்பல் செய்தியைப் படித்துவிட்டு இன்றைய தினசரிகளைப் புரட்டினேன். ராமஜெயம் கொலை குறித்து ஒரு வரிகூட இல்லை. புலனாய்வு செய்திகளில் கும்பல் பட்டையைக் கிளப்புகிறது. ராமஜெயம் கொலையாளியைப் பற்றி விரிவான தகவல்களையும் புகைப்படத்தையும் பதிவு செய்யுங்கள்.
புலனாய்வு செய்திகளீல் கலக்குகின்றீர்கள்... ராமஜெயம் கொலையான நாளிலிருந்து தொடர்ந்து கும்பல் தரும் அப்டேட்ஸ் படித்து வருகிறேன். குற்றவாளி பிடிபட்ட செய்தியையும் கும்பல்தான் முதல் முதலில் வெளியிட்டிருக்கிறது. கீப் இட் அப் கும்பல்!
உங்களுக்கும் ,திரு.அமல்ராஜ்I.P.S.அவர்களுக்கும்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்
S VE SHEKHER
சூப்பர் செய்தி சார்... கலக்குறீங்க... அந்த குற்றவாளியை போலீஸ் எப்போ கண்ணில் காட்டும்? ராமஜெயத்தை கொன்னவனை பார்த்தே ஆகணும்...
Post a Comment