Latest Movie :

விரைவில் நேரு கைது?!



அமல்ராஜ் அதிரடியில் அடுத்தடுத்த திருப்பங்கள்...
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை சட்டென சூடு பிடித்திருக்கிறது. திருச்சி போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் ஆந்திர மாநில இடைத்தேர்தல் பார்வையாளராக சென்றுவிட, கமிஷனர் நாற்காலியில் இப்போது அமல்ராஜ் அமர்த்தப்பட்டிருக்கிறார். இதுநாள் வரை விசாரணை நடத்திய தனிப்படை அதிகாரிகளை தூக்கியடித்துவிட்டு, அதிரடியாக புது ஆட்களைக் கொண்டுவந்திருக்கிறார் அமல்ராஜ்.

திருவாரூர் எஸ்.பி சேவியர் தன்ராஜ் தலைமையில் நான்கு இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவும்,ஏ. டி.எஸ்.பி. நாகை மணிவண்ணன் தலைமையில் ஒரு தனிப்படையும், வல்லம் ஏ.எஸ்.பி.விஜயகுமார் தலைமையில் ஒரு படையும் அமைக்கப்பட்டுள்ளது. 

''எங்களின் சரித்திரத்திலேயே இந்தளவுக்கு குற்றப்பின்னணி கொண்ட ஒரு நபரை நாக்கால் பார்த்ததே இல்லை. அரசியல், ரியல் எஸ்டேட், தாதாயிசம், செக்ஸ் டார்ச்சர் என ராமஜெயத்தின் பலவிதமான முகங்களும் எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு விவகாரத்திலும் அவருக்கு குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட எதிரிகள் இருக்கிறார்கள். அதனால்தான் குற்றவாளியை நெருங்க முடியாத அளவுக்கு சந்தேக பட்டியல் பெரிதாக நீள்கிறது. அமல்ராஜ் விசாரணை வளையத்துக்கு வந்த உடனேயே ராமஜெயம் குடும்பத்தினர் மீதுதான் உக்கிரப் பார்வையைக் காட்டி வருகிறார். நேரு மீது போலீஸ் தரப்புக்கு இருக்கும் சந்தேகங்கள் வரிசையாக நீண்டு வருகின்றன. ஆனால், அவர் போலீஸ் தரப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்க தொடர்ந்து மறுத்து வருகிறார்.
அமல்ராஜ் விசாரணையில் அடுத்தபடியாய் நேரு போலீஸ் ஸ்டேஷனுக்கே அழைக்கப்படலாம். இதுகுறித்து உளவுத்துறை தலைவர் ராமானுஜத்திடம் அமல்ராஜ் விரிவாகப் பேச, நேருவை கைது செய்யவும் தயங்க வேண்டாம் என அவர் அனுமதி கொடுத்துவிட்டார். தனக்கு விசுவாசமான அதிகாரிகள் விசாரணை படையில் இருந்து நீக்கப்பட்டதையே நேருவால் தாங்க முடியவில்லை. அவர்கள்தான் அனுதின விசாரணை விவரங்களை நேருவுக்கு ரகசியமாகச் சொல்லி வந்தார்கள். இந்நிலையில், அமல்ராஜின் அதிரடி தன்னை எந்த நேரத்திலும் வளைக்கும் என்பதை அறிந்து மிகுந்த வாட்டத்தில் இருக்கிறார் நேரு. இதுகுறித்து ஸ்டாலினிடம் அவர் சொல்லியதாகவும் பேச்சிருக்கிறது!'' என்கிறார்கள் திருச்சியின் அரசியல் மற்றும் போலீஸ் வட்டத்தை அறிந்தவர்கள்.
அமல்ராஜின் அதிரடிகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

- கும்பல் 
Share this article :

+ comments + 1 comments

3 June 2012 at 04:00

ராமஜெயம் கொலை குறித்து பரபரப்பாக எழுதிய அத்தனை மீடியாக்களும் அந்த செய்தியை அப்படியே மறந்துவிட்ட நிலையில், தொடர்ந்து அப்டேட்ஸ் கொடுக்கும் கும்பலுக்கு நன்றிகள்!

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger