Latest Movie :

சி.டி.யில் சிக்கிய தியாகு...



தாமரையை மொய்க்கும் மீடியாக்கள்!


டிப்படை நாகரீகத்தையும் மனிதாபிமான உணர்வுகளையும் மீடியாக்கள் அடியோடு மறந்து விட்டன. தாமரை - தியாகு மோதல் குறித்து மிகுந்த தன்மையோடும், நாகரிகம் குறையாமலும் நாம் எழுதி வருகிறோம். ஆனால், தாமரை, தியாகு இருவருடைய தனிப்பட்ட விசயங்கள் தொடங்கி, அவர்களின் குடும்பக் கதைகள் வரை மீடியாக்கள் சகட்டுமேனிக்கு எழுதித் தள்ளுகின்றன. அடுத்தபடியாக தியாகு - தாமரை விவகாரத்தில் நக்கீரன் உள்ளிட்ட பத்திரிக்கைகள் ஒரு சி.டி.க்காக படாத பாடுபடுகின்றன. அந்த சி.டி. தியாகுவின் தனிப்பட்ட பதிவுகள் அடங்கிய சி.டி.யாம்!

விஜயலெட்சுமி என்கிற பெண்ணுடன் பழகியது தகப்பனுக்கும் மகளுக்குமான உறவை போன்றது என மீடியாக்களிடம் சொல்லி வருகிறார் தியாகு. ஆனால், விஜயலட்ஷுமியின் கணவரோ, 'என் மனைவியை பல ஊர்களுக்கும் தியாகு அழைத்துச் செல்கிறார். ஒரே அறையில்தான் அவர்கள் இருவரும் தங்குகிறார்கள். அதை எப்படி அப்பன் - மகள் உறவு எனச் சொல்ல முடியும்?' என தொடர்ந்து வேதனை புராணம் பாடி வருகிறார்.  தாமரையும் மீடியாக்களிடம் இதே கருத்தைத்தான் சொல்லி வருகிறார். 

இந்நிலையில்தான் அடுத்த பூதம் கிளம்பியிருக்கிறது. அதாவது, தியாகு - விஜயலெட்சுமி உறவு குறித்த உண்மையைச் சொல்லும் சி.டி. பதிவுதான் அது. வெளியூர் சென்றிருந்த போது அவர்கள் இருவரும் சம்மந்தப்பட்ட அந்த காட்சி பதிவு செய்யப்பட்டதாகவும், அது தற்போது தாமரையின் கையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதைத் தெரிந்துகொண்ட மீடியாக்கள் தொடர்ந்து தாமரையிடம் அந்த சி.டி.யைக் கேட்டு வற்புறுத்தி வருகிறார்கள். 



'இப்படியெல்லாம் நடக்குமா?' என நீங்கள் நினைத்தால், அதுவே இந்த அட்டூலியக்காரர்களுக்கு தக்க செருப்படியாக இருக்கும். மீடியாக்களின் கோரப்பசியை அறிந்த தாமரையும் இந்த கொடூரத்துக்கு எப்படி துணை போகிறார் என்பதுதான் ஆச்சரியம்? அவர் சரிப்படுகிறாரா என்று பார்க்கிறேன்... ஒத்துவரவில்லை என்றால் நானே அந்த சி.டி.யை உங்களுக்கு கொடுக்கிறேன் என்றும் தாமரைக்கு ஆதரவான ஒருவர் மீடியா நண்பர்களிடம் சொல்கிறாராம். மொத்தத்தில் தாமரை - தியாகு வாழ்வில் ஒற்றுமையை உருவாக்கி வைக்க இவர்களுக்கு விருப்பம் இல்லை என்பது மட்டும் பளிச்சென புரிகிறது. இருவருடைய வாழ்க்கை எத்தனை பேருக்கு தீனி!

- கும்பல் 
 
Share this article :

+ comments + 2 comments

Anonymous
6 June 2012 at 10:50

கும்பல்... தயவுசெய்து இனியும் இந்த மேட்டரை பெரிதாக்காதீர்கள். தியாகு தாக்கப்பட்ட செய்தியை நீங்கள் தான் முதலில் வெளியிட்டீர்கள். அதனை நான் நம்பவில்லை. ஆனால், பிரகுதான் அது உண்மை எனத் தெரிய வந்தது. சி.டி. மெட்டார் உட்பட நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான்... ஆனாலும் என் அன்பு வேண்டுகோள்... தயவு செய்து தியாகு பற்றி இனியும் எழுதாதீர்கள்... ப்ளீஸ்... கும்பல் ப்ளீஸ்...

6 June 2012 at 10:56

தியாகு என்ன நித்தியானந்தாவா... அவருக்கும் சிடி சர்ச்சையா... உவ்வே....

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger