Latest Movie :

சேரனை பழி தீர்த்த அமீர்



பெப்சி தொழிலாளர்களுக்காக ஆதரவாக அமீர் செயல்பட்டபோது "தயாரிப்பாளர்களது நிலை அமீருக்கு புரியவில்லை. அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க நான் முயற்சிப்பேன்" எனச் சொன்னார் சேரன். 

காலம் உருண்டோடி அமீர் இப்போது பெப்சி தலைவர்! அமீர் மீது நடவடிக்கை எடுப்பதாக சொன்ன சேரன் இப்போது அமீர் தயவை நாடுகிற நிலையில் அல்லாடுகிறார். அவருக்கும், இயக்குனர் முகுந்தனுக்கும் இடையே நடக்கும் பணப் பஞ்சாயத்து இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. முகுந்தன் தரப்பில் தான் நியாயம் இருக்கிறது அதனால் முகுந்தன் சொல்வதற்கு சேரன் கட்டுப்படவேண்டும் என கறாராக சொல்லிவிட்டார் அமீர். 

சேரனுக்கு ஆதரவாக தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் எவ்வளவோ பேசி பார்த்தும், அமீர் அதற்க்கு அசைந்து கொடுக்கவில்லை.  அதனால் மூன்று மாதமாக நீடித்த பஞ்சாயத்து முகுந்தனுக்கு சாமதமாக மாறிவிட்டது. பெப்சி பிரச்சனையில் அமீரை எதிர்த்து பேசியதற்காக, இந்த பண விஷயத்தில் அவர் தன்னை பழி தீர்பதாக புலம்பி வருகிறார் சேரன்.  

- கும்பல் 
Share this article :

+ comments + 3 comments

சேரனை பழி தீர்க்கத்தான் அமீர் பெப்ஸிக்கு தலைவரானாரா? பெப்ஸியில் தீர்க்கப்படாமல் கிடக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. அதையெல்லாம் தீர்க்க முயற்சிக்காமல் எந்நேரமும் ஜனநாதனையும் பத்து உதவி இயக்குநர்களையும் பக்கத்துலேயே வைத்துக் கொண்டு அமீர் பந்தா காட்டியபடி இருய்க்கிறார். இப்படிப்பட்டவ்வங்க எல்லாம் எதுக்கு பொறுப்புக்கு வரணும்?

Anonymous
26 June 2012 at 20:42

அமீர் பாய்... அடுத்த படம் ஜிகாத் என்பது உண்மைதானா? நீங்களும் கமலும் இணைந்து படம் பண்ணப்போவதாக கிளம்பிய செய்தி உண்மையா பொய்யா?

சேரனின் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அமீருக்கு நன்றி. உதவி இயக்குநர்களை கிள்ளுக் கீரையாகப் பார்க்கும் சேரனுக்கு இதுவும் தேவை இன்னமும் தேவை

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger