நித்தியானந்தாவுக்கு சிம்ம சொப்பனமாக தொடர்ந்து பரபரப்பு கிளப்பி வருகிறார் ஆர்த்தி ராவ். அடுத்தபடியாய் தமிழகம் மற்றும் கர்னாட செய்தி சேனல்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவரும் ஆர்த்தி ராவ், ''நித்தியானந்தா சம்மந்தப்பட்ட இன்னும் பல ரகசியங்களை வெளியிட நான் தயார். பெண்களிடம் மட்டும்மல்லாது ஆண்களிடமும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும் குரூர மனம் கொண்டவர் நித்தி. ஆரம்பத்தில் இதை நான் நம்பவில்லை. ஆனால், ஒருமுறை நான் என் கண்ணாலேயே அந்தக் கருமத்தைக் கண்டேன். அது பற்றி சொல்லத் தயாராக இருக்கிறேன்" என சொல்லி இருக்கிறார். நித்தியானந்தாவை ஒழித்துக் கட்டுவதையே பெரும் சமூகக் கடமையாகக் கொண்டிருக்கும் சன் குழுமம் ஆர்த்தி ராவ் பேட்டியை பெரிய அளவில் ஒளிபரப்ப பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னிலையில் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஆர்த்தி ராவ், அவரது தந்தை, லெனின் கருப்பன் ஆகியோர் தன்னைப் பற்றி மீடியாக்களிடம் பேசக்கூடாது என மனு தாக்கல் செய்திருக்கிறார் நித்தி.
இதற்கிடையில், ஆர்த்தி ராவுக்கு பாலியல் தொற்று நோய் இருந்ததாகவும், அதனால் அவரை ஒருபோதும் தன்னருகில் நெருங்க விட்டதே இல்லை என்றும் சொல்லி வரும் நித்தியானந்தா அடுத்தபடியாய் ஆர்த்தி ராவ் அமெரிக்காவில் மேற்கொண்ட சிகிச்சை விவரங்களையும் வெளியிட இருக்கிறார். எச்சில் மூலமாகப் பரவும் தொற்று நோய் லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரும் என்றும், அந்த வியாதிக்கு ஆர்த்தி ராவ் ஆளாகி இருந்தார் என்றும் ஆதாரப்பூர்வமாக நித்தி விளக்கம் கொடுக்க போகிறாராம்.
நமக்குத் தெரிந்த மருத்துவ வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தபோது, ''எச்சில் மூலமாக பரவும் வியாதிகள் எத்தனையோ இருக்கின்றன. ஆனால், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு எந்த வியாதியும் கிடையாது. பாலியல் நோய்கள் பிறப்பு உறுப்புகளைக் காட்டிலும் வாய் மூலமாகவே அதிகமாகப் பரவும். இதில் எயிட்ஸ் வியாதியும் அடக்கம். ஆனால், லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே உருவாகும் எச்சில் வியாதி என்று எதுவுமே கிடையாது." என்கிறார்கள்.
ஒருவேளை அது நித்தியின் அடுத்த கண்டுபிடிப்போ என்னவோ...
- கும்பல்


Post a Comment