ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக விஜயகாந்த் அறிவித்திருப்பது தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்களை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக வாக்களித்தால் பல கோடிகள் தருகிறோம் என பலர் பேரம் பேசிய போதும், அதற்கு இடம் கொடுக்காமல் புறக்கணிப்பு நிலைப்பாட்டையே தொடர்ந்தார் விஜயகாந்த்.
இதுதான் வருமானத்திற்கு வழியின்றி தவிக்கும் தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்களை கடுப்பில் ஆழ்த்தியிள்ளது. ஏற்கனவே ஆளும் கட்சி உடனான மோதலால் காண்ட்ராக்ட் கமிசன் பார்க்க முடியாமல் திண்டாடும் தே.மு.தி.க-வினர், ஜனாதிபதி தேர்தலை வைத்தாவது பணம் பார்த்து விடலாம் என நினைத்தார்கள். அதற்கும் வழியில்லாமல் போனதால் , ஆளும் கட்சி ஆதரவு கரங்களுக்குள் முடங்க முடிவெடுத்துள்ளார்கள்.
தே.மு.தி.க-வின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த மருது அழகுராஜ் என்பவர்தான், இப்போது நமது எம்.ஜி.ஆர் - பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருக்கிறார். அ.தி.மு.க பக்கம் தாவ முடிவெடுத்திருக்கும், தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள் மருது அழகுராஜ் மூலமாகத்தான் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
விஜயகாந்தின் மிக நெருங்கிய நண்பரும், எம்.எல்.ஏ-வுமான சுந்தரராஜன் தான் அதிருப்தி ஆட்களை ஒன்றுதிரட்டி வருகிறார். சுந்தரராஜன், பண்ருட்டி ராமச்சந்திரன்,மா.பா.பாண்டியராஜன், நடிகர் அருண்பாண்டியன் உள்ளிட்ட 9 தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள், அ.தி.மு.க. பக்கம் தாவ முடிவெடுத்துவிட்டார்கள். அணிதாவல் சட்டப்படி அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோய்விடாமல் இருக்க சட்ட ரீதியான முனைவுகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விஷயங்கள் அனைத்தும் விஜயகாந்த் பார்வைக்குப் போய்விட்டதாகவும், அணிதாவ இருக்கும் 9 பேர்களையும் தடுக்க வேண்டாம் என அவர் சொல்லிவிட்டதாகவும் பரபரக்கிறது கட்சி வட்டாரம். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று!
- கும்பல்

+ comments + 1 comments
9 நம்பரை பார்த்தவுடனே ஏதோ திருனங்கைக்கும் கேப்டனுக்கும் ஊறுகா தகராறோன்னு நினைச்சிட்டேன். இவ்வளவு சீரியஸான பிரச்சனௌக்கு ஏன் இப்படி ஒரு தலைப்பு? கும்பல் குசும்பு...
Post a Comment