ஒரு கொலை... ஓராயிரம் திருப்பங்கள்!
முன்னாள் அமைச்சர் ராமஜெயம் கொலை குறித்து நம் கும்பல் இணையதளம் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. போலீஸ் நடவடிக்கைகளை கொஞ்சமும் மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடி தொடர்ந்து ராமஜெயத்தின் கொலைக் காரணங்கள் குறித்து எழுதி வருகிறோம். பல முன்னணி மீடியாக்களே நமது அப்டேட்ஸ் பார்த்து நிருபர்களை விரட்டிய கதைகள் உண்டு. சரி, சுய புராணத்தைத் தவிர்த்துவிட்டு மேட்டருக்கு வருவோம்...
கடந்த ஒரு வாரமாக நமது நிருபர் குழு முகாமிட்டிருந்தது திருச்சியில்! ராமஜெயத்தை கொலை செய்த கொலையாளியை நெருங்கி விட்டதாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் பரபரப்பு கிளம்பிய நிலையில், அதில் திடீர் சுணக்கம் உண்டாகி, வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றுகிற அளவுக்கு ஏன் போனது? குற்றவாளிகள் குறித்து அனைத்து தகவல்களும் கிடைத்த நிலையிலும், திடீர் பின்னடைவு ஏற்பட்டது எப்படி? யார்டு போலீஸ்
அதிரடிக்கு நிகராக வர்ணிக்கப்படும் தமிழக போலீஸ் சட்டென சறுக்கியது ஏன்?
குடும்பக் குளறுபடிகளே காரணம்!
ராமஜெயம் கொலை விசாரணை நீண்டுகொண்டே போனதற்கு அவருடைய குடும்பத்தார் ஒத்துழைப்பு கொடுக்காததே காரணம் என்கிறார்கள் நமக்கு தொடர்ந்து தகவல் தரும் போலீஸ் அதிகாரிகள் சிலர். இரவு இரண்டு மணிக்கு மேல் ராமஜெயம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருக்கிறார் என்பது போலீஸ் ஸ்மெல் செய்த முதல்கட்டத் தகவல். ஆனால், இன்றுவரை ராமஜெயத்தின் மனைவி, 'என் கணவர் காலையில்தான் வாக்கிங் சென்றார்' என உறுதியாகச் சொல்கிறார். ராமஜெயத்தின் முதல் நாள் நடவடிக்கைகள் குறித்தோ, அவருக்கு எதிரிகளாக இருந்தவர்கள் குறித்தோ ராமஜெயத்தின் மனைவி வாய் திறக்கவே இல்லை. அது மட்டுமல்ல... ராமஜெயத்தின் மனைவியை போலீஸ் விசாரிக்கும் போதெல்லாம், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் கொடுக்கும் டார்ச்சர் ஏராளம்.
ராமஜெயத்தின் அண்ணன் நேரு, மத்திய இணையமைச்சர் நெப்போலியன், மணிவண்ணன், ராமஜெயத்துக்கு ஆள் இன் ஆளாக இருந்த வினோத் என ஒருவர் விடாமல் விசாரித்தது போலீஸ். ஆனால், அவர்கள் அனைவருமே சொல்லி வைத்ததுபோல், 'ராமஜெயம் எங்களிடம் எதையுமே சொல்ல மாட்டார்' என்பதையே தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். சாதாரண குடும்பங்களில் யாராவது கொலை செய்யப்பட்டால், சம்மந்தப்பட்ட குடும்பத்தின் உறுப்பினர்கள் எப்படிப் பதறுவார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால், ராமஜெயத்தின் கொலை பரபரப்பும் துயரமும் அவருடைய குடும்பத்தில் முதல் வாரத்தோடு முடிந்து விட்டது.
'கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்காவிட்டால் போலீஸ் மெத்தனத்தைக் கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்' எனக் கொந்தளித்திருக்க வேண்டிய ராமஜெயத்தின் குடும்ப உறுப்பினர்கள் எதோ ஒரு எலி செத்ததுபோல் சட்டென தங்களை சகஜப்படுத்திக் கொண்டார்கள். போலீஸ் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் யாரும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை.
திடீரென ராமஜெயம் கொலை விசாரணைக்காக பிரத்யேகமாக அழைத்து வரப்பட்ட திருவாரூர் எஸ்.பி. சேவியர் தன்ராஜ் தான் இந்தக் குடும்பக் குளறுபடிகளை நோக்கியே தன் விசாரணையை விரித்திருக்கிறார். நேர்மையான, நுணுக்கமான இந்த அதிகாரியின் செயல்பாடுகள் அடுத்த சில நாட்களிலேயே சைலன்டான மர்மம்தான் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
'போலீஸ் அதிகாரிகளுக்குள் நடக்கும் ஈஹோ மோதலால்தான் சேவியர் அமைதியானார்' என சிலர் சொன்னாலும், கிட்டத்தட்ட கொலையாளி இவன்தான் என மிக அண்மையைத் தொட்ட சேவியர் ஈஹோவுக்காக பின்வாங்குவாரா என்பதும் உறுத்தலான கேள்வியாக இருக்கிறது.
அமல்ராஜுக்கு என்னாச்சு?
சேவியர் தன்ராஜை காட்டிலும் அமல்ராஜை தான் ராமஜெயத்தின் ஆதரவாளர்கள் பலரும் ஆர்வத்தோடு பார்த்தார்கள். ராமஜெயத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் அமல்ராஜுக்கு அத்துப்படியானவை. ராமஜெயத்தின் பேஸ்கட் பால் விளையாட்டு நண்பராக இருந்தாலும், ராமஜெயத்துக்கு தலை வணங்காமல் நெத்தியடியாக அவருடைய கொட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் அமல்ராஜ். திருச்சி கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் ஆந்திர தேர்தலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியாக வந்தவர் அமல்ராஜ். வந்தவுடனேயே தனிப்படை அதிகாரிகளை தூக்கியடித்த அமல்ராஜ், துடிப்பான இளம் அதிகாரிகளை களமிறக்கினார். அதற்கு கைமேல் பலன். 'இன்னும் இரண்டே நாட்களில் கொலையாளிகளை மீடியாக்கள் முன்னால் நிறுத்துவேன்' என உறுதிபடச் சொன்னார் அமல்ராஜ். ஆனால், ஆந்திர தேர்தல் முடிந்து சைலேஷ் குமார் யாதவ் வந்ததும், தனக்கும் ராமஜெயம் கொலை விசாரணைக்கும் சம்மந்தமே இல்லாததுபோல் ஒதுங்கிக் கொண்டார் அமல்ராஜ்! இதன் பின்னணிதான் போலீஸ் வட்டாரத்தையே கிறுகிறுக்க வைக்கிறது.
பின்னணியில் ஒரு பெண்!
போலீஸ் அதிகாரிகள் பலரும் ராமஜெயத்தின் கொலை மர்மத்தை உடைக்கத் தயங்குவதற்கு காரணம்.... இது முழுக்க முழுக்க பெண்கள் சம்மந்தப்பட்ட விவகாரம். கொலையான இரவில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு போனில் பேசியிருக்கிறார் ராமஜெயம். நிறைய மது அருந்தியிருக்கிறார். விரல் சுண்டினால் முன்னணி நடிகைகளே மஞ்சத்து வரத் தயாராக இருந்த நிலையிலும், வற்புறுத்தியும் மிரட்டியும் பணிய வைப்பது தான் ராமஜெயத்தின் குணம். கொலைக்கான காரணமாக அமைந்ததும் இந்தக் குணமே...
ஓட்டுனர்தான் இந்த விவகாரத்தின் மிக முக்கிய மர்மப்புள்ளி. ராமஜெயத்தின்
தவறான சகவாசங்கள் குறித்த மலைக்க வைக்கும் தகவல்களை இவனிடம் இருந்துதான் போலீஸ் கரந்தது. 'இப்படியும் ஒரு மனிதரா?' என போலீஸ் அதிகாரிகளே எரிச்சல் அடைகிற அளவுக்கு செக்ஸ் விசயத்தில் மிக மோசமானவராக இருந்திருக்கிறார் ராமஜெயம். (இறந்த ஒருவரை பற்றி தவறாக எழுதுவது தவறு என்கிற மரபு நமக்கும் தெரிந்ததே... ஆனாலும், கொலைக்கான மர்ம முடிச்சை விளக்க வேண்டிய சூழலில் இதனை எழுதுவது தவிர்க்க முடியாதது!)
எல்லோரிடமும் விளையாடிய ராமஜெயம் தனக்கு எல்லாமுமாக இருந்த நண்பரின் குடும்பத்திலேயே கைவைத்தாக சொல்கிறார்கள். சம்பவம் நிகழ்ந்த இரவன்று அந்தக் குடும்பப் பெண்மணியிடம் ராமஜெயம் தவறாக நடந்த நிலையில்தான் கொலையும் நடந்திருக்கிறது. தாங்க முடியாத வேதனையில் அந்தப் பெண்மணியே ராமஜெயத்தை கொன்றதாகவும், அதன் பின்னர் அந்தப் பெண்ணின் கணவர் பிணத்தை கொண்டுபோய் நகருக்கு வெளியே போட்டதாகவும் சொல்கிறார்கள். அந்தப் பெண்ணும், அவருக்குத் துணையாய் இரு ஆண்களும் இந்தக் கொலையை நிகழ்த்தியதாக உறுதிபடுத்துகிறது போலீஸ். ஆனால், இதனை வெளிப்படையாக்கினால் ராமஜெயத்தை அசிங்கப்படுத்தியதாக நேருவின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்குமே என நினைக்கிறது போலீஸ் தரப்பு. 'நடந்தது இதுதான்' என்பதை மேலிடத்திடம் பட்டெனப் போட்டு உடைக்கவும் தயங்கியது போலீஸ். அதனால்தான், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியது அரசு.
சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கும் ராமஜெயம் கொலை வழக்கு சீக்கிரமே முடிவுக்கு வருமா... இல்லை, வழக்கம்போல் ஜவ் மிட்டாய் கதைதானா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். சி.பி.ஐ விசாரணைக்கு அனுப்பப்பட்ட வக்கீல் சங்கரசுப்புவின் மகன் கொலையான விவகாரமே இன்றுவரை கண்ணாமொச்சி காட்டுகிறது. பார்க்கலாம்... ராமஜெயம் கொலை வழக்கில் என்னதான் நடக்கிறது... எப்போதுதான் நடக்கிறது? - கும்பல்




+ comments + 4 comments
மிக விளக்கமான விரிவான கட்டுரை. பொலீஸ் இந்த விவாகரத்தை மறைக்கப் பார்க்கும் மர்மத்தை விரிவாக எழுதியிருக்கிறீர்கள். வேறு எந்த பத்திரிக்கைகளும் எழுதாத அளவுக்கு ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள். சபாஷ் கும்பல்!
சிபிசிஐடி விசாரணை மட்டும் உடனே இந்தக் கொலையை துப்புப் துலக்கிவிடுமா என்ன? கே.என்.நேருவிடம் பேசி வாங்க வேண்டியதை எல்லாம் வாங்கிவிட்டு, அதன் பிறகு அப்பாவி யாரையாவது கொலைகாரனாக நிறுத்துவார்கள். நல்ல விசாரணை...... நல்ல போலீஸ்.....
கும்பல் விசாரணை நடத்துகிற அளவுக்குக்கூட பொலீஸ் விசாரணை நடத்தாது போலிருக்கே...
PAYANGARAMA IRUKKE...
Post a Comment