Latest Movie :

கேப்டனுக்கு டெபாசிட்...


மந்திரிகளுக்கு ரிவிட் அடித்த ஜெ!


"ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் கட்சி வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் ஜெயிப்பார்; அவரை எதிர்த்துப் போட்டியிடும் யாருக்குமே டெபாசிட் கிடைக்காது!" - இது கடந்த வாரம் முதல்வருக்கு உளவுத்துறை ஐ.ஜி. அம்ரேஷ் பூஜாரி கொடுத்த ரிப்போர்ட். 
ஆனால், நடந்ததோ வேறு... தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்துப் போட்டியிடாத நிலையிலும் 71 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தையே ஆளும் கட்சியால் பெற முடிந்திருக்கிறது. ஆளும் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகிர் உசேன் 30,500 வாக்குகள் பெற்று டெபாசிட் கைப்பற்றினார். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தி.மு.க. இயக்கமே டெபாசிட்டை இழந்த நிலையில், புதுகையில் தே.மு.தி.க. டெபாசிட்டைக் கைப்பற்றி இருப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது. தங்களுக்காக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கு ஜெயலலிதாவும், விஜயகாந்தும் தனித்தனி அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். 

ஆனால், கார்டனில் நடந்த கதையே வேறு என்கிறார்கள். தேர்தல் முடிவு படிப்படியாக வெளியானபோதே அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வமும், செங்கோட்டையனும் உடனடியாக கார்டனுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இருவருக்கும் செமத்தியான திட்டு விழுந்ததாகச் சொல்கிறார்கள் கட்சி வட்டாரத்தில். ''புதுக்கோட்டையைப் பொருத்தவரை உட்கட்சி மோதல் தீவிரமாக இருந்தது. நம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் உண்மையாக உழைக்கவில்லை'' என சொல்லியிருக்கிறார்கள் இரு அமைச்சர்களும். இதையடுத்து, சீக்கிரமே புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் சிலர் மாற்றப்படலாம் என்கிறார்கள்.
Share this article :

+ comments + 1 comments

Anonymous
19 June 2012 at 06:02

Ggggggggggggg

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger