Latest Movie :

'உளவு' காத்த பொன்ஸ்... ஓடோடி வந்த டேவிட்சன்!



                                தமிழக உளவுத்துறை டி.ஐ.ஜி., யாக, டேவிட்சன் தேவாசிவதம் நியமிக்கப்பட்டுள்ளார். உளவு பிரிவு டி.ஐ.ஜி., யாக இருந்த பொன் மாணிக்கவேல் மாற்றப்பட்ட பிறகு , அப்பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், மத்திய போதைபொருள் நுண்ணறிவுப் பிரிவு டி.ஐ.ஜி., யாக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம், சமீபத்தில் மத்திய பணியில் இருந்து, மாநில போலீஸ் பணிக்கு மாற்றப்பட்டார் .தொடர்ந்து அவர், காத்திருப்போர் பட்டியலில் இருந்தார்.



இந்நிலையில் அவர், உளவுத்துறை  டி.ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். 
மிக நேர்மையானவராகவும், உளவுப்புலியாகவும் வர்ணிக்கப்படும் இவரை முதல்வரே சிறப்பு கவனம் எடுத்து உளவுப்பணிக்கு அழைத்து இருக்கிறாராம்! 



'எப்படியும் மீண்டும் உளவுத்துறைக்கு வந்துவிடுவேன்' - எனச் சொல்லி வந்த பொன் மாணிக்கவேலுக்கு இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை உருவாக்கி இருப்பதாக சொல்கிறார்கள்.







Share this article :

+ comments + 1 comments

போலீஸ் செய்திகளை முடிந்தமட்டும் தவிர்க்கப் பாருங்கள். காக்கி உலகத்தில் யாரையும் நல்லவர்கள், கெட்டவர்கள் என உறுதியிட்டுச் சொல்ல முடியாது!

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger