Latest Movie :

கருணாவுக்கு டாடா காட்டிய வைகோ!


 புதுக்கோட்டையில் போட்டி இல்லை!

புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தல் பரபரப்பு இப்போதே துவங்கி விட்டது. அ.தி.மு.க.வின் வேட்பாளராக கார்த்திக் தொண்டைமான் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் யாரை நிறுத்துவது எனத் தெரியாமல் திண்டாடி வருகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என அறிவித்து விட்டது. இந்நிலையில், ம.தி.மு.க. சார்பில் போட்டியிடப் போவது யார் என்பது புரியாத புதிராக இருந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தனி ஈழத்துக்காக டெசோ அமைப்பை மறுபடியும் துவக்கியிருக்கும் நிலையில், வைகோ அதனை ஆதரிப்பாரா ... அப்படி ஆதரித்தால் அதனையே தேர்தலுக்கான கூட்டாகவும் கருணாநிதி அறிவித்து விடுவாரே என பலரும் யோசித்தனர். 
இத்தகைய அனுமானத்துக்கும் யூகத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வைகோ முடிவெடுத்து விட்டார். புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடாது என விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார்.  புதுக்கோட்டை மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க.சந்திரசேகர் போட்டியிடத் தயாராக இருந்தும், அவரை வைகோ சமாதானம் செய்துவிட்டாராம். 
தி.மு.க. சார்பில் போட்டியிட மாவட்டச் செயலாளர் பெரியண்ணா அரசு, ரகுபதி, முத்துசாமி உள்ளிட்டோர்  ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

- கும்பல் 
Share this article :

+ comments + 1 comments

1 May 2012 at 10:20

NALLA MUDIVU....
KARUNAVIN VANJAGAM VELLAKOODATHU.

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger