தமிழீழ ஆர்வலர்கள் தயவுசெய்து மன்னிக்க..! நம்ப முடியாத செய்திதான்... ஆனாலும், மிகுந்த விசாரணைக்குப் பிறகு தயக்கத்துடனேயே இதனை வெளியிடுகிறோம். சமீபகாலமாகவே உணர்வாளர் தியாகுவுக்கும் பாடலாசிரியர் தாமரைக்கும் சரியான மனப்போக்கு இல்லை என்கிறார்கள் உணர்வாளர்கள் சிலர்.
பத்து நாட்களுக்கு முன்பு தாமரைக்கும் தியாகுவுக்கும் கடுமையான சண்டை நடந்திருக்கிறது. அதன் பிறகு தியாகு எங்கே இருக்கிறார் என்பதே யாருக்கும் தெரியாமல் இருந்தது. தோழர்கள் சிலர் விசாரித்த போது தான் அந்த உண்மை எல்லோரையும் அதிர வைத்திருக்கிறது. வீட்டுக்குள் படுத்த படுக்கையாக கிடந்திருக்கிறார் தியாகு. அவர் உடல் முழுக்க கடுமையான காயங்கள் இருந்ததாகவும் சொல்கிறார்கள். தமிழ் தேசிய முன்னெடுப்புகளை தீவிரப்படுத்திய தோழரின் நிலையைக் கண்டு துடித்துப்போயிருக்கிறார்கள் அவர்கள்.
இதற்கிடையில் இந்தத் தகவல் கொளத்தூர் மணியின் கவனத்துக்கு செல்ல, அவர் பதறியபடி ஓடிவந்திருக்கிறார். இருவரிடமும் அவர் கலந்து பேசியிருக்கிறார். இரு தரப்பிலும் நடுநிலையானவர்கள் தற்போது பேசி வருகிறார்கள். ஆனாலும், இருவருக்கும் இடையே ஒட்டுதல் ஏற்பட வாய்ப்பு இல்லை என்கிறார்கள் பலரும். இதற்கிடையில் தியாகுவுக்கு கட்சி சம்பந்தமான பிரச்சனையும் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
தவறு தாமரை மீதா... தியாகு மீதா... என்பதை ஆராய்வது அல்ல நம் எண்ணம்... தமிழுணர்விலும் ஈழ ஆர்வத்திலும் ஒன்றிணைந்த சிந்தனை கொண்டவர்களான தாமரையும் தியாகுவும் யார் மனமும் வருந்தாதபடி புரிந்து செயல்பட வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பும் கோரிக்கையும்!ஈழ உணர்வாளர்களை நோகடிக்கும் பரப்புதல் வேலைகள் தீவிரமாக நடக்கும் இந்த காலகட்டத்தில் அதற்கு கொஞ்சமும் இடம் கொடுக்காதபடி இருவரும் நடந்துகொள்வதே நல்லது!
சே.சத்தியசீலன்
+ comments + 14 comments
இது தாமரை அக்காவுக்கு எதிரான கட்டுரை. ஈழ ஆர்வலர்களுக்கு எதிரான பரப்புதல் வேலையை பலரும் செய்கிறார்கள் எனச் சொல்லி, நீங்களூம் அதே வேலையைத்தான் செய்திருக்கின்றீர்கள். உண்மையாகவே தாமரை அக்காவுக்கும் தோழர் தியாகுவுக்கும் இடையே இப்படியொரு சம்பவம் நடந்திருந்தால், இன்னேரம் பல பத்திரிக்கைகளீலும் வெளியாகி இருக்கும், கணவன் - மனைவிக்கு இடையே நிகழ்ந்த மிகச் சாதாரண பிரச்சனையை கும்பல் இணையதளம் பெரிதாக்கி ஆதாயம் தேடுகிறது என்பதே என் எண்ணம். தரமாகவும் தனித்தன்மையாகவும் செய்திகளை தந்துவரும் கும்பல் இணையதளத்துக்கு ஏன் இந்த வீண் வேலை?
திருந்துங்கள்... இல்லையேல் திருத்தப்படுவீர்கள்!
தாமரையும் தோழர் தியாகுவும் திருமணம் செய்துகொண்ட போதே நிறைய போராட்டங்களை எதிர்கொண்டவர்கள். சரியான புரிதலும், திட்டமிடும் பக்குவமும் கொண்ட இவர்கள் இருவரும் பத்திரிக்கைகளின் பசிக்கு இரையாகி விடாதபடி தங்களின் பிரச்சனையைப் பேசித் தீர்க்க வேண்டும். அதற்கான ஆலோசனையை சே.சத்தியசீலன் நேர்த்தியாக எழுதியிருக்கிறார்.
தோழர் தியாகு தற்போது அவருடைய முதல் மனைவியின் வீட்டில் தங்கி இருக்கிறார் என்பதாகக் கேள்வி. முடிந்தால் அவரிடம் நேரடியாகவே பேசி, உண்மையை விசாரியுங்கள். அவசரப்பட்டு எதையும் மீடியாக்கள் எழுதக் கூடாது என்பதே எங்களின் வேண்டுகோள்!
கும்பல் செய்திக்கு பிறகாவது இருவரும் இணைந்து வாழ்ந்தால் சரிதான்!
தாமரை - தியாகு மோதல் சம்பந்தமாக வெளியே மிகத் தவறான செய்திகள் பரவிவரும் நேரத்தில், அந்த இடைவெளியை சரிசெய்யும் கடமையாக தக்கபடி அறிவுறுத்தல் கட்டுரை வெளியிட்டிருக்கிறீர்கள். இவர்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை நடந்தாலும், அது ஈழ ஆர்வலர்களுக்கான அவமானமாகவே அமையும். அதனால், இவர்களின் பிரச்சனையை உடனடியாகப் பேசித் தீர்ப்பதே நல்லது.
Thamarai......?
ஈழத்துக்கே நேரில் போய்வந்து தமிழீழ முன்னெடுப்புகளூக்குப் போராடிய தாமரையின் பங்களிப்புகளை உணர்வாளர்கள் யாரும் மறந்து விடக்கூடாது. இந்த விவகரத்தில் தியாகு மீது தான் தவறு என என் நண்பர்கள் பலரும் சொல்கிறார்கள். தயவுசெய்து அது பற்றி விசாரியுங்கள் ப்ளீஸ்.
தோழர் தியாகு அதிர்ந்து பேசாதவர். அவர் மீது தவறு இருக்க வாய்ப்பே இல்லை. தஞ்சாவூரிலிருந்து வந்த இளம்பெண் ஒருவருடன் தியாகுக்கு தொடர்பு என தாமரையின் ஆதரவாளர்கள் தவறாகப் பரப்புகிறார்கள்.
தாமரை தியாகு பிரச்சனை இன்றைய ஜூனியர் விகடனில் முதல் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. கீப் இட் கும்பல்!
தாமரைக்கும் தொழர் தியாகுக்கும் பிரச்சனை என்று கும்பலில் செய்தி வந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், இன்றைக்கு பல ஊடகங்களிலும் அந்தப் பிரச்சனை வெளியாகி உள்ளது. ஆனால், கும்பல் இணையதளத்தில் மிகுந்த நாகரிகத்தொடும், அவர்களின் நலன் மீதான அக்கறையோடும் கட்டுரை வெளியாகி உள்ளது.
கொல்லிமலையைச் சேர்ந்த பெண்ணுடன் தியாகு ஓடிவிட்டதாக சொல்கிறார்களே... அது உண்மையா? தயவு செய்து இந்தப் பிரச்சனையின் நிஜமான பின்னணியை விளக்குங்கள்!
Ithu pontra seithikalai thavirkkalaam
அரசியல் வாதிகள் பொது வாழ்வில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்...தனி மனித ஒழுக்கம் மிகவும் அவசியமானது...தியாகு இதில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை...இவ்வாறான நபர்கள் அரசியலுக்கும் வந்து அதையும் சீரழித்து விடுகிறார்கள்...இதில் பொதுவுடைமை பற்றி பேசுவது வெட்கக் கேடானது...தோழரின் மகளை திருமணம் செய்த தியாகு தாமரையோடு உறவு வைத்துக்கொள்வதே தவறு..மேலும் மேலும் பெண்களோடு உறவு என்பது சீரழிவின் உச்சம்...தமிழ் பண்பாட்டிற்கு எதிரான செயல்...
தியாகு எத்தகைய பாதைகளைக் கடந்து வந்தவர்; கம்பிக்குள் வெளிச்சம் தொடங்கி படைப்பு ரீதியிலான எத்தகைய பங்களிப்புகளைச் செய்தவர்; மக்கள் தொலைக்காட்சி மூலமாக அன்றாட நிகழ்வுகளை எப்படியெல்லாம் தோலுரித்தவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. தனிப்பட்ட வாழ்வில் அவருக்கு நிகழ்ந்திருக்கும் சோகத்தை நினைத்து வருந்துகிறேன். உலகின் சர்வ வல்லமை படைத்த தலைவர்களாக உலா வந்த பலரும் இத்தகைய சோகங்களுக்கு ஆளானவர்கள்தான். வைகோ மீது கூட ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு கூறி, அது பத்திரிக்கைகளில் பெரிதாக வந்ததாக எனக்கு நினைவு இருக்கிறது. தியாகு மிக தைரியமாக இருக்க வேண்டியது இப்பொதுதான்!
Post a Comment