Latest Movie :

தியாகு ஹவுஸ் அரெஸ்ட்!



தாமரை - தியாகு 

மோதலும் முழுப் பின்னணியும்!




பாடலாசிரியார் தாமரைக்கும் தோழர் தியாகுவுக்கும் இடையில் பிரச்சனை உருவாக்கி இருப்பது குறித்து நாம் எழுதியதுதான் தாமதம். அவர்கள் இருவரும் பிரிந்து விடக்கூடாது என்கிற அக்கறையிலும், உணர்வாளர்கள் மீதான அன்பிலும் எதிர்ப்பு கருத்துக்களை கடுமையாகப் பதிவு செய்தார்கள் வாசகர்கள் பலரும். குறிப்பாக வெளிநாட்டு வாசகர்கள் இந்தப் பிரச்சனையை அறவே நம்ப மறுத்தார்கள். ஆனால், இன்றைக்கு கத்தரிக்காய் கடைக்கு வந்துவிட்டது. தியாகு - தாமரை மோதல் மீடியாக்களின் வாய்க்கும் அவலாகி விட்டது. ஆண் - பெண் பிரச்சனை என்றால் அனுமானங்களுக்கு சொல்ல வேண்டுமா என்ன? இத்தகைய சூழ்நிலையில் இந்தப் பிரச்சனை குறித்த தெளிவான ஆராய்வை வாசகர்களுக்கு அளிக்கவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.


ஹவுஸ் அரெஸ்ட் தியாகு?

தியாகுவுக்கும் தாமரைக்கும் இடையில் மனக்கசப்பு வருவது இது ஒன்றும் புதிதாக இல்லை. அடிக்கடி இருவருக்கும் இடையே பிரச்சனைகள் வருவது வழக்கம். ஆனால், சமீபத்திய பிரச்சனை அப்படிப்பட்டது அல்ல. 'தியாகு எங்கே?' என்கிற கேள்வி வந்த பிறகுதான் தாமரையுடனான மோதல் வெளியே தெரிந்தது. ஈழ விவகாரங்களிலும், பொதுத்தள முன்னெடுப்புகளிலும் முதல் ஆளாக முன்னாள் நிற்பவர் தியாகு. ஆனால், கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது. தாமரை அவரை ஹவுஸ் அரெஸ்ட் செய்து வைத்திருக்கிறார் என்கிற தகவல் லேசாக கசிந்து உணர்வாளர்களை அதிர வைத்தது. கொளத்தூர் மணி தாமரையின் வீட்டுக்கு சென்ற போது உடல் முழுக்க காயங்களோடு படுக்கையில் கிடந்திருக்கிறார் தியாகு.

தாக்கினாரா தாமரை?

தியாகுவின் உடலில் இருக்கும் காயங்கள் கடுமையானவை. குடும்ப ரீதியான தகராறில் அவர் தாக்கப்பட்டிருக்க கூடும் என்கிறார்கள் உணர்வாளர்கள். கடந்த சில வாரங்களாக தியாகு வீட்டுக்கு வராமல் வேறு சிலரோடு சகவாசம் வைத்திருந்ததாகவும், இதனால் தாமரை கடுமையான கோபத்துக்கு ஆளானதாகவும் சிலர் சொல்கிறார்கள். அதற்காக கணவரைத் தாக்குகிற அளவுக்கு தாமரை கடுமையானவர் இல்லை. இருவருக்கும் இடையே சமாதானம் செய்துவைக்க வந்த சிலர்தான், தியாகுவை கடுமையாகத் தாக்கி, தாமரையின் வீட்டிலேயே கட்டிப்போட்டுவிட்டதாக தகவல்கள் வருகின்றன. 

தியாகு எங்கே?

தாமரையின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட தியாகு தற்போது எங்கே இருக்கிறார் என்பது மீடியாக்களின் தேடலாக இருக்கிறது. அவர் எங்கும் தலைமறைவு ஆகவில்லை. தன் முதல் மனைவியின் வீட்டில்தான் அவர் தங்கி இருக்கிறார். அவருடைய செல்போன் பறிக்கப்பட்டுவிட்டது. கடுமையான காயங்களுக்கு அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

நீக்கப்பட்டார் தியாகு!

தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தை தொடங்கி அதன் பொதுச் செயலாளராக இருப்பவர் தியாகு. ஆனால், கடந்த வாரம் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டு விட்டதாக சொல்கிறார்கள். இந்த அமைப்பின் நிர்வாகிகள் பலரும் ஒன்று சேர்ந்து விவாதித்து, தியாகுவை நீக்கி இருக்கிறார்கள். 'தனி மனித ஒழுக்கக் கேட்டால் இயக்கத்துக்கு மாறாத கேட்ட பெயரை ஏற்படுத்து விட்டார்' என தியாகு மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. 

பின்னணியில் தாமரையா?

தியாகுவின் சமீபகால நடவடிக்கைகள் குறித்து  தமிழ் தேசிய விடுதலை இயக்க தோழர்களிடம் தாமரை குமுறியிருக்கிறார். 'தியாகுவின் சகவாசங்கள் நட்பு அடிப்படையில் அமைந்தவை அல்ல' என சில பெண்களின் பெயர்களை சுட்டிக்காட்டி அவர் வருந்தி இருக்கிறார். அதன் அடிப்படையிலேயே தியாகு அவர் தொடங்கிய இயக்கத்திளிருந்தே நீக்கப்பட்டு இருக்கிறார் என்கிறார்கள்.

திசைமாறினாரா தியாகு?

தாமரை - தியாகு மோதலுக்கு முக்கியக் காரணமாக முதல் மனைவி குறித்த விவகாரம்தான் கிசுகிசுக்கப்படுகிறது. முதல் மனைவியோடு மறுபடியும் அன்பு பாராட்ட ஆரம்பித்து விட்டார் என்றும், முதல் மனைவியின் மகளுக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் தமிழகப் பிரதிநிதி என்கிற பொறுப்பை தியாகு வாங்கிக் கொடுத்து விட்டார் என்றும் சொல்லப்பட்ட... அதுதான் தாமரையை கொதிக்க வைத்து விட்டது. இதற்கிடையில் தியாகு சமீபகாலமாக தஞ்சாவூரிலிருந்து வந்திருந்த பெண் ஒருவரிடம் உரிமை எடுத்துப் பழகியதாகவும் பேச்சிருக்கிறது.

கும்பல் ரியாக்க்ஷன்!

தாமரை - தியாகு மோதல் குறித்து நம் கும்பல் இணையதளத்தில் செய்தி வெளியானதும், பலரும் தாமரையை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ''நான் எதுவும் பேச விரும்பவில்லை. யார் என்ன எழுதினாலும் எனக்கு கவலையில்லை. மன உளைச்சலில் தவிக்கும் என்னை மேலும் வருத்தப்படுத்த வேண்டாம்'' என்றாராம். 

தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் விவாதப் பொருளாகி இருக்கும் தாமரை - தியாகு குடும்ப வாழ்க்கை மேற்கொண்டு எவ்வித சங்கடத்துக்கும் ஆளாகக் கூடாது என்பதே நம் எல்லோருடைய எதிர்பார்ப்பும்!

- கும்பல் 

 
Share this article :

+ comments + 2 comments

தியாகு எத்தகைய பாதைகளைக் கடந்து வந்தவர்; கம்பிக்குள் வெளிச்சம் தொடங்கி படைப்பு ரீதியிலான எத்தகைய பங்களிப்புகளைச் செய்தவர்; மக்கள் தொலைக்காட்சி மூலமாக அன்றாட நிகழ்வுகளை எப்படியெல்லாம் தோலுரித்தவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. தனிப்பட்ட வாழ்வில் அவருக்கு நிகழ்ந்திருக்கும் சோகத்தை நினைத்து வருந்துகிறேன். உலகின் சர்வ வல்லமை படைத்த தலைவர்களாக உலா வந்த பலரும் இத்தகைய சோகங்களுக்கு ஆளானவர்கள்தான். வைகோ மீது கூட ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு கூறி, அது பத்திரிக்கைகளில் பெரிதாக வந்ததாக எனக்கு நினைவு இருக்கிறது. தியாகு மிக தைரியமாக இருக்க வேண்டியது இப்பொதுதான்!

21 May 2012 at 19:31

வசீகரிக்கும் பாடல்களில் மனதை உருக்கியவர் தாமரை. அவருடைய வாழ்வில் இவ்வளவு சோகங்களா? நினைக்கவே வருத்தமாக இருக்கிறது.

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger