கும்பல் வாசகர்கள் கொண்டாடலாம்..
''சாதிய வெறியோடு அரசியல் நடத்தும் இந்த அடாவடி ரௌடிகளை சட்டத்தின் கரம் கொண்டு அடக்க வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமை. சாதி வெறியைத் தூண்டும் விதமாக பேசிய லட்சகணக்கானோர் கூடிய கூட்டத்தில் எத்தனை காவலர்கள் பாதுகாப்புக்காக பணியாற்றியிருப்பார்கள். அவர்களில் யாரிடமாவது புகார் வாங்கி காடுவெட்டி குருவை கைது செய்ய வேண்டும்,. தலித் மக்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்து மேற்கொள்ளும் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு இனியும் மக்கள் பாடம் புகட்டாமல் விடக் கூடாது."
- கடலூர் வெள்ளைசாமி
(கீழே உள்ள தலைப்பை க்ளிக் செய்யவும்)
மாமல்லபுரம் பா.ம.க. கூட்டத்தில் சாதிய ரீதியாக பேசிய காடுவெட்டி குரு மீது போலீஸ் வழக்குப் போடாதது ஏன் நம் கும்பல் இணையதளத்தில் ஆதங்கத்தோடு எழுதியிருந்தோம். கடலூர் வெள்ளைசாமி உள்ளிட்ட பலரும் இதே ஆதங்கத்தைக் கருத்து வடிவில் பதிவு செய்திருந்தார்கள். நம் கட்டுரைக்கான லிங்க்கை தமிழக போலீஸ் அதிகாரிகள் பலருக்கும் மெயில் அனுப்பியிருந்தோம். இந்த நிலையில், காடுவெட்டி குரு மீது மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சாதிய உணர்வைத் தூண்டுதல், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகப் பொதுமக்களைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் காடுவெட்டி குரு மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உடனடியாக நடந்திருக்க வேண்டிய நடவடிக்கை இது. தாமதமாகவாவது நடந்திருக்கிறதே என நம்மைத் தேற்றிக்கொள்வோம். உளவுத்துறை டி.ஜி.பி. உள்ளிட்டட பலருக்கும் அனுப்பப்பட்ட நம் கும்பல் செய்தியால் இந்த நடவடிக்கை நடந்திருந்தால், நம் வாசகர்கள் எல்லோருக்குமான பெருமிதமாக இந்த வெற்றி அமையும்!
கும்பல் ஆசிரியர் குழு
+ comments + 4 comments
KEEP IT UP KUMBAL!
காடுவெட்டி குருவுக்கே....குரு பெயர்ச்சி எபக்ட்
இத்தகைய சிறப்பான முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்யுங்கள்> காடுவெட்டி குரு போன்ற சாதிய வெறியர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
Avaru pesiyathu correct than....yaravathu parents samathathoda vera caste or low caste girl ah marriage panunka...Apuram solunka caste irka ilayanu...
Pachai Tamilan...
Post a Comment