சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் மாநில அளவிலான முக்கியப் பதவி தனக்கு கிடைக்கும் என காத்திருந்தார் கனிமொழி. ஆனால், அவருக்கு மகளிரணிச் செயலாளர் பதவியை மட்டுமே கொடுக்க தலைமை முடிவெடுத்தது. ஏற்கனவே குடுமிப்பிடியின் கூடாரமாகக் கிடக்கும் மகளிரணியை தான் எப்படி நிர்வகிக்க முடியும் என புலம்பினார் கனிமொழி. 'என்னுடைய துணைப் பொதுச் செயலாளர் பதவியை தூக்கி வீசத் தயாராக இருக்கிறேன். அதனை கனிமொழிக்கு கொடுங்கள்' என சற்குணபாண்டியன் பகிரங்கமாக கருணாநிதியிடம் முறையிட்ட பிறகும் அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் தனக்கு எந்தப் பதவியும் வேண்டாம் என சொல்லிவிட்டார் கனிமொழி. பொதுக்குழு சமயத்தில் அவர் அமைதியாக இருந்தாலும், தனக்கு பின்னடைவை ஏற்படுத்தியது யார் என்பதை அறிய அவர் தீவிரமாகவே இருந்தார். ஒருகட்டத்தில் அவர் ஸ்டாலின்தான் எனத் தெரியவந்தது.
'ஸ்பெக்ட்ரம் விவகாரம்தான் கடந்த தேர்தலில் தி.மு.க.வை இவ்வளவு கேவலமான தோல்விக்கு ஆளாக்கியது. குறிப்பாக பல தொகுதிகளுக்கு கனிமொழி பிரச்சாரம் செய்ததும் நமக்கு மரியாதை குறைவை உண்டாக்கி விட்டது. அதனால், சில காலத்துக்கு கனிமொழி சம்பந்தப்பட்ட விசயங்களை கட்சிக்குள் அனுமதிக்காமல் இருப்பதே நல்லது' என கருணாநிதியிடம் தன் மனக்கருத்தைப் பதிவு செய்தாராம் ஸ்டாலின். இதுதான் கனிமொழியை கடுமையான ஆவேசத்தில் தள்ளி இருக்கிறது.
கடந்த 23.3.12 அன்று திடிரென டெல்லி ஐகோர்ட்டில் கனிமொழி ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், 'எனக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தபோது கலைஞர் டி.வி.காக 200 கோடி ரூபாய் பெறப்பட்டது என்பதுதான் சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டு. இந்த காலகட்டத்தில் கலைஞர் டி.வி.யில் நான் 20 சதவீத பங்குகளை மட்டுமே வைத்திருந்தேன். மற்றபடி கலைஞர் டி.வி. எடுத்த எந்த முடிவுகளிலும் நான் தலையிட்டது இல்லை; எந்த ஆவணங்களிலும் கையெழுத்து போட்டதுமில்லை. 2007 -வது வருடம் ஜூன் மாதம் இரண்டு வாரங்கள் மட்டுமே கலைஞர் டி.வி.யின் இயக்குனராக இருந்தேன். அப்போது நிதி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கலைஞர் டி.வி.யின் மூளையாக நான் செயல்பட்டதாக சி.பி.ஐ. சொல்வது தவறு' எனச் சொல்லியிருக்கும் கனிமொழி அடுத்து சுட்டிக்காட்டும் வார்த்தைகள் தான் மிகக் குறிப்பிடத்தக்கவை.
'லஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தினால் நான் எந்த ஆதாயம் பெற்றேன் என்றோ, அந்தப் பணம் என் வங்கிக் கணக்கில் இருந்தது என்றோ சி.பி.ஐ. குற்றச்சாட்டில் நிரூபிக்கப்படவில்லை. அதனால், ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து என் பெயரை நீக்க வேண்டும்!' என சொல்லி இருக்கிறார் கனிமொழி.
இப்படியொரு மனு செய்தால் சி.பி.ஐ. அவருடைய பெயரை நீக்கி விடாது என்பது சிறுபிள்ளைக்கும் தெரிந்த உண்மை. அப்படியிருக்க இந்த மனுவை ஐகோர்ட்டில் சமர்பிக்க வேண்டிய அவசியம் என்ன? இதுதான் ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட செக் என்கிறார்கள் தி.மு.க. வட்டாரத்தில்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் தனக்கு சம்பந்தம் இல்லை என்பதை ஐகோர்ட்டில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் வந்தால் அதற்காக கனிமொழி சில நிகழ்வுகளை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். 200 கோடி ரூபாய் கைமாறிய விவகாரத்தில் ஸ்டாலினுக்கு நெருக்கமான சிலரைக் கைகாட்ட தயங்க மாட்டேன் என்பது தான் கனிமொழியின் மிரட்டல்.
சரி,இந்த மிரட்டல் எதற்காக? குடியரசுத் தலைவர் தேர்தல், மம்தாவின் மிரட்டல் உள்ளிட்ட விசயங்களால் கூட்டணிக் கட்சிகளை மீண்டும் கட்டித் தழுவ வேண்டிய கட்டாயத்தில் தவிக்கிறது காங்கிரஸ். ஏற்கனவே தி.மு.க.வுக்காக இரண்டு மத்திய அமைச்சர் பதவிகள் காத்திருப்பில் வைக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் சொல்லி இருக்கிறது.அதனை நிறைவேற்றும் தருணம் நெருங்கி விட்டதாக நினைக்கிறார் கனிமொழி. அந்த இரண்டு பதவிகளில் ஒரு பதவியைத் தனக்குப் பெற்றுத்தர வேண்டும் என தலைமையை மிரட்டத் தொடங்கிவிட்டார் கனிமொழி. ஆனால், ஸ்டாலின் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார். 'ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் சிக்கிய கனிமொழிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் பலரும் சிரிப்பார்கள்' என கருணாநிதியிடம் கொதித்திருக்கிறார் ஸ்டாலின்.
முக்குலத்தோர் தரப்பில் டி.கே.எஸ். இளங்கோவனும், தலித் ஒதுக்கீட்டில் ஏ.கே.எஸ்.விஜயனும் அமைச்சர்கள் ஆக்கப்பட்ட வேண்டும் என்பது ஸ்டாலின் வைக்கும் கோரிக்கை. தனக்கும்,டி.ஆர்.பாலுவுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்பது கனிமொழியின் கறார்! 'அமைச்சர் பதவியையும் மறுத்தால்,ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் மொத்த உண்மைகளையும் கொட்டி அத்தனை பேரின் பங்கையும் அம்பலமாக்குவேன்' என கனிமொழி மிரட்டுவதால்... கட்சித்தலைமைக்கு கடும் நெருக்கடி உண்டாகி இருக்கிறது.
பார்க்கலாம்... அண்ணன் - தங்கை மோதலில் யார் ஜெயிக்கிறார்கள் என்று!
- கும்பல்

.jpg)





+ comments + 5 comments
மிக நல்ல கட்டுரை... தி.மு.க.வில் நிலவும் இன்றைய குளறுபடிகளை மிக விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள். அழகிரிக்கும் ஸ்டாலினுக்குமான மோதல் கனிமொழி ரூட்டிலும் திரும்பியிருப்பது கலைஞருக்கு மிகப்பெரிய தலைவலியாக அமையும். வினை விதைத்தவர்கள் நல்லபடி வினையை அறுக்கட்டும்!
அ.தி.மு.கவில் ஜெயாவும் சசியும் நடந்தும் காதல், மோதல் கதைகள் பத்தாது என தி.மு.கவில் இப்படி முக்கோண மோதல் நடக்கிறதே.... கிட்டத்தட்ட மெஹா சீரியல் கதைகள் போல கட்சிகளுக்குள் இப்படி நடக்கிறதே... இந்த அப்பாவித் தொண்டகளை நினைத்தால் தான் வேதனையாக இருக்கிறது!
கனிமொழி கேட்பது நியாயமான கோரிக்கைதானே... உண்மையாகவே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஸ்டாலினுக்கு பங்கிருந்தால், அதற்கான தண்டனையை அவரும் அனுபவைத்திருக்கத்தானே வேண்டும்., ஆனால், 150 நாட்கள் சிறையிலிருந்த கனிமொழியின் வேதனையையும் அவர் புரிந்து கொள்ளாமல் இருப்பது நியாயமில்லை. கனிழ்மொழி தேசப் போராட்டத்துக்காக ஜெயிலுக்கு போகவில்லை என்பது தனிக்கதை. ஆனாலும், குடும்ப ரீதியான மோதலில் கனிமொழி பக்கம் நியாயம் இருப்பதாகவே நடுநிலையான தி.மு.க.வினர் நினைக்கிறார்கள்.
எங்கள் ஆதரவு கனிக்கே!
Annan ennada thangai ennada avasaramaana ulakaththile... Ippadikku appavi d.m.k thondan
Post a Comment