திருச்சி கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறியபடி இருக்கின்றன. தனிப்படைகளின் விசாரணை வளையம் இதுவரை ஐந்து பேரை சிக்க வைத்திருக்கிறது.பெண் சம்பந்தமான புரோக்கர் உட்பட ஐவர் சிக்கி இருக்கும் நிலையில், அடுத்தபடியாய் தி.மு.க. பிரமுகர் ஒருவரும் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவரைத் துருவி எடுக்கும் தனிப்படை அதிகாரிகள் அதுகுறித்த தகவல்களை வெளியே சொல்ல மறுக்கின்றனர். மிக முக்கிய சோர்ஸ் மூலமாக கசியத் தொடங்கியிருக்கும் அந்த செய்தி என்ன தெரியுமா?இதனை கடுமையாக மறுத்து சில போலீஸ் அதிகாரிகளிடம் பேசியிருக்கிறார் எஸ்ஸார் கோபி. ''அழகிரி அண்ணனுக்கு எதிராக கடிதம் எழுதியதாக கிளப்பிவிட்ட பிரச்சனையே இப்போது தான் ஓய்ந்திருக்கிறது. அப்படியிருக்கையில் என்னை திட்டமிட்டு ராமஜெயம் வழக்கில் சேர்க்கிறார்கள். எனக்கும் அவருக்கும் பணம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் இருந்தது உண்மைதான். ஆனால், அது மிக சாதாரணமான பிரச்சனை. தயவு செய்து என்னை இந்த வழக்கில் சேர்க்காமல் காப்பாற்றுங்கள்" எனப் புலம்பியிருக்கிறார் கோபி.
தனிப்பட்ட பழிவாங்களுக்காக நடந்திருக்கும் கொலை தான் இது என உறுதி செய்த போலீஸ் நாம் ஏற்கனவே சொன்னபடி உண்மை குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டது. ஆனாலும், சொல்ல முடியாத காரணங்களை வெளியிடத் தயங்கியும், நேரு மீதான நல்லெண்ணம் குறையக்கூடாது என எண்ணியும் சற்றே அமைதி காக்கிறது காக்கி.இதற்கிடையில், எஸ்ஸார் கோபி விவகாரத்தை போலீஸ் இழுப்பது திட்டமிட்ட ஓன்று தான் என நினைக்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்.
நாளையே விசாரணை என்கிற பெயரில் எஸ்ஸார் கோபி போலீஸ் வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டால் அது, அழகிரிக்கும் நேருவுக்குமான மோதலின் தொடக்கமாக அமையும் என்பது நிச்சயம்!
இதற்கிடையில் ராமஜெயத்துக்கும் மத்திய அமைச்சரும் அவருடைய நெருங்கிய உறவுக்காரருமான நெப்போலியன் விவகாரத்தையும் போலீஸ் உற்றுக் கவனிக்கிறது. ராமஜெயத்துடன் மோதல் ஏற்பட்ட பிறகு தான் நெப்போலியன் அழகிரி பக்கம் சாய்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது!


+ comments + 4 comments
மிக அற்புதமான பதிவு,,, கலக்குகிறது கும்பல். தமிழ் மீடியாக்களை மிரட்டுகிர அளவுக்கு பிரித்து மேய்கிறீர்கள்.
ராமஜெயம் கொலை வழக்கில் இப்படியொரு திருப்பம் நிகழ்ந்திருப்பதை எந்த மீடியாக்களும் சொல்லாத நிலையில், கும்பல் பட்டையைக் கிளப்புகிறது. போலீஸ் சோர்ஸ் மூலமாகத்தான் கும்பல் இவ்வளவு விரிவாக எழுதுகிறதா? இல்லை நடுநிலையான ஆட்களின் தகவல்களா? கும்பல் இணையதளத்துக்கு நாங்கள் சொல்லும் பணிவான அட்வைஸ்... புலனாய்வில் கலக்கும் தாங்கள் தயவுசெய்து போலீஸ் தரும் செய்திகளை அப்படியே நம்பி விடாதீர்கள். இன்றைய தமிழ்ப் பத்திரிக்கைகள் செய்யும் தவறை நீங்களும் செய்யாதீர்கள். போலீ(ஸ்) என்கவுன்டரை பற்றி நீங்கள் படுதுல்லியமாகவும் உன்மையான நிகழ்வையும் எழுதிய பிறகே உங்கள் மீது எனக்கு நம்பிக்கை வந்தது. அதே மாதிரி போலீஸ் அதிகாரிகள் செய்யும் தவறை யாருக்கும் தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள். எனக்குத் தெரிந்து பல போலீஸ் அதிகாரிகள்கும்பல் இணையதளத்தை தினமும் பார்க்கிறார்கள். அவர்களுக்கே நீங்கள் தான் நியூஸ் தானம் செய்கிறீர்கள். ராமஜெயம் கொலை வழக்கின் முழு பின்னணியையும் வெளிப்படுத்தி விரைவில் ஒரு கட்டுரை எழுதுங்கள்.
Azhagiriyin pinnani ithil unda? Vilakkamaaga ezhuthungal..........
Latest update?
KAMAlAKKANNAN
Post a Comment